பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆதலால், நம்முடைய இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒருகுலமாகி, ஒரு குடும்ப உணர்வில் அன்பினைப் பெருக்கி, உறவினை வளர்ப்போமாக, நம் முடைய சமூகத்தில் பலரோடும் கூடிப் பழகி இதயத்தினை வளர்த்துக் கொள்வோமாக.

இன்று நம்முடைய சமூகத்தில் பரவியுள்ள ஒரு தீமை உறவின்வழி அன்பு காட்டுவது. இது தீது, ஒரு பொழுதும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இஃது ஆக்கம் தராது. அன்பின் வழி உறவுவழித் தோன்றும் அன்பு உறவுக்குரிய காரணங்கள் மாறுபடும்பொழுது, குறையும்; வற்றும். ஏன் முரண்பாடுகளாகக் கூட உருமாறி விடுகின்றன.

நம்முடைய சமூகத்தில் நாள்தோறும் ஏற்படும் மன முறிவுகள் அளப்பில. சாலை விபத்துக்களைச் செய்தியாக்குவதைப் போல மனமுறிவுகளைச் செய்தியாக்கினால் சிந்தனை கலங்கும். சிலர் மனமுறிவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யாமல் சாமர்த்தியமாகச் சமாளிக்க முயலுகின்றனர். வேறுசிலர், மனமுறிவுகளையே வெற்றி தோல்விகள் ஆக்குகின்றனர். எது எப்படியாயினும் மனமுறிவுகள் வரவேற்கத்தக்கன அல்ல.

ஆதலால், மனமுறிவுகள் தோன்றுதலுக்குரிய சூழல்களையே தவிர்த்திடுதல் வேண்டும். அதற்கு ஒரே வழி அன்புதான். அன்பிற்குத் தடையாய் இருப்பன தன்னலமும், தன்முனைப்புமேயாம். தீமையைக் கூட ஒறுத்தலின் மூலம் ஒரு பொழுதும் மாற்ற இயலாது. தீமையுடையாரையும் கூட உவந்து, கலந்து பேசி மாற்றுதலின் மூலமே நிலையான அடிப்படையில் தீமை மாறும்.

ஆனால் நன்மையில்லாதார் ஒருவர் தீமையை அந்தத் தீமையின் காரணமாகவே தாம் நன்மையுடையார் போல் காட்டிக் கொள்ளும் தீய பழக்கம்தால்தான் மனித உறவுகள் பாதிக்கின்றன. ஆதலால், எந்தக் காரணத்தையும் மனத்திற்