பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

321


தக்கவகையில் வளர்க்கப் பெறுதல் வேண்டும். இந்து சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்தல்-உதவி செய்தல் இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும். இந்து சமூகத்தில் எந்தவொரு மனிதன் நலிவுற்றாலும் காலப்போக்கில் இந்து சமூகத்தின் மொத்த உருவமும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். ஆதலால், இந்து சமூகத்திற்கு உதவிகளைச் செய்து அதனை வாழ்விக்க முன் வரவேண்டும். ஆதலால் உதவிகள் செய்வோம்!

“ஒழுங்கினைக் காப்போம்!
உறவினை வளர்ப்போம்!
உதவிகள் செய்வோம்!”

என்ற இந்த மூன்று கோட்பாடுகளையும் சிந்தனையாலும் செயலாலும், அக நிலையிலும் புறநிலையிலும் ஒவ்வொருவரும், நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கோட்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இந்து சமூகத்தினர் பக்தியில் சிறப்பர்; ஞானத்தினைப் பெறுவர்; உறவிற் கலந்து ஒருகுலமாக வாழ்வர். இந்துக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வர், நாம் அனைவரும் சிறந்த இலட்சியத்தினை அடைந்து மகிழ்வோம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


அவர்களைத் தேருங்கள்

நாம் வணங்கும் இறைவன் காலத்தை வென்றவன். ஆதலால் “காலகாலன்” என்பர். அப்படியானால் என்ன பொருள்? இறைவனுக்குக் சாதல் பிறத்தல் இல்லையென்று சிலர் கூறுவர். அதாவது, ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை யென்பர். இதுதான் காலத்தை வென்றவன் என்பதற்குப்