பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

323



அவனே உயிர்களை நோக்கிப் பள்ளங் கால்மடையாக இறங்கி வந்தருளிச் செருப்படியைப் பெறுதலும் உண்டு.

இறைவனுக்கு வரன்முறைகள், சம்பிரதாயங்கள், சட்டதிட்டங்கள் இல்லை. இறைவனுக்கு ஒரே நோக்கு உயிர்களை ஆட்கொள்ள வேண்டும் என்பதே இந்த நோக்கத் திற்காக இறைவன் செய்யாத செயல் ஏதேனும் உண்டா? இறைவன் ஆட்கொண்டருளுவதற்காக உயிர்களின் நிலைநோக்கிப் பெறும் கோலங்கள் புதுமைக் கோலங்கள். அதனால் எந்த ஒரு காலத்துச் சமுதாயமும் அவனைக் கண்டு ஒதுங்காமலும், அவனால் ஒதுக்கப் பெறாமலும் ஆட் கொள்ளப்படும் கருணையைப் பார்க்கிறோம். இத்தகைய உயர் அருள் நெறியை நோன்பாக, சீலமாகக் கொள்ள வேண்டுமென்பதே சமயநெறி. இறைவன் திருவிளையாட்டில் அவனடைந்த முத்திரைகள் யாதுமில்லை. ஆனால், உலகச் சமுதாயத்தின் வாழ்க்கையில் அவன் பதித்த முத்திரைகள் பலப்பல உண்டு.

காலம், நம்மைப் பொறுத்தவரையில் புவியீர்ப்பு ஆற்றலைவிட வெகுவேகமாக இருந்து வீழ்த்துகிறது. காலத்தின் அருமை புரிவதில்லை. நாம் குறிப்பிடுவது இரண்டு பொருளிலுமேதான். ஒன்று காலத்தை அளக்கும் விநாடிகளின் அருமை. வினாடிகளைக் காப்பாற்றுவதும் கடமை தான். ஆனால் வினாடிகளைக் காப்பாற்றுவதன் உட்பொருள் என்ன?

அந்தந்தக் காலத்தின் அருமைப்பாடுகளை அறிந்து உணர்ந்து படிப்பினைகளை ஏற்றுக் காலம் நம்மைக் கட்டுப்படுத்தாமல், காலத்தை நாம் கட்டுப்படுத்தும் அளவுக்கு வளரவேண்டும்.

கட்டுப்படுத்துதல் ஆணையினாலன்று அறிவினால், அன்பினால், உணர்வினால் என்பதை மறத்தல் கூடாது. கால வெள்ளத்தில் ஆணைகள் சிதறும். ஆணைகளுக்குரிய