பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

347



அலைமகள் வழிபாடு

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனுடன் அலைகடலில் உறையும் திருமகள் - இலக்குமி, செல்வம்! திருமகள் வழிபாடு என்பது பொருளை, செல்வத்தைப் போற்றுதல் என்பதாகும். இந்த வையகத்தின் வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது திருக்குறள், இங்குப் பொருள் என்றது பணத்தையல்ல. வாழ்க்கையை இயக்கப் பயன்படும் - உண்டு, தின்று, உடுத்து வாழ்வதற்குப் பயன்படும் பொருள்களை யேயாம்!

பண்டமாற்றுமுறை வந்தவுடன் நம்மையும் அறியாமல் பணமதிப்பீட்டுச் சமுதாயம் வளர்ந்து வருகிறது. அதாவது, பணத்தை உண்மையில் மதிப்பைத் தந்த - மானுட வாழ்வை இயக்கும் நுகர்வுப் பொருள்களே செல்வமாகும். நெல், பயறு, கடலை, கரும்பு முதலிய பொருள்களைச் செல்வமாக - திருமகளாக எண்ணிப் போற்றிப் பாதுகாத்திடுதல் வேண்டும். இந்தச் செல்வங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுவது ஒரு வகையில் திருமகள் வழிபாடாகும்.

சமயத்துறையினர் காத்தற் கடவுளாகிய திருமாலின் மனைவியே திருமகள் எனக் கூறுவர். இந்த உலக இயக்கத்தை, மானுடத்தைப் பேணிக்காத்து இயக்குவது திருமகள் வழிபாடு எனக் கொள்ளுதல் சாலப் பொருந்தும்.

மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்து மண்ணில் விளையும் பொருள்களை உண்டு வாழ்தலே வாழ்க்கை வாழ்க்கையை நடத்த உண்மையில் துணையாக அமைவது பணப்பெட்டியன்று; நிலமேயாகும். இன்று, பணப் பெட்டிக்குத் தரும் மரியாதையை நிலத்திற்கு யாரும் தருவதில்லை. நமது நாட்டில் பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப் படாமல், மண் அரிப்புக்கு