பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாதிப்பால் இல்வாழ்க்கை தரம் தாழ்த்தப் பெற்றுக் கொச்சைப் படுத்துப் பெற்றது. திசை தவறிய இந்த நிலையில் தான் அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றது. இறைவனே முன்னின்று சுந்தரருக்கு இரண்டு திருமணங்களை நடத்தி வைத்தமையை ஓர்க. திருஞானசம்பந்தர் திருமருகலில் திருமணம் செய்து வைத்தமையை எண்ணுக. ஆதலால் மனிதர்களை முறையான வாழ்வில் ஆற்றுப்படுத்துதலும் அந்நெறியில் நின்று வாழச் செய்தலும் சமயத் தொண்டேயாம்.

அடுத்து மானிட வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய இசை முதலிய கலைகளை வளர்ப்பதும் சமயத் தொண்டே சமயம் கலைகளாக, கலைகளின் முடிவாக முடிந்த கலையாக விளங்குகிறது. “ஏழிசையாய், இசைப் பயனாய்” நின்றாடும் தேவதேவனை உன்னுக. திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாய நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய திருத்தொண்டர்களின் வரலாற்றையும் அறிக. ஆதலால் கவின் கலைகளை வளர்த்து மானுடத்தின் தரத்தை உயர்த்துவதும் சமயத் தொண்டேயாம்.

இயற்கையோடிசைந்தது நமது வாழ்வியல், நமக்கு பாதுகாப்பு இயற்கைதான். இயற்கையோடு ஒத்து இசைந்து வாழ்ந்தபோதெல்லாம் வாழ்க்கை சிறந்து விளங்கியிருக்கிறது. இயற்கையையே இறைவனாக எண்ணிப் போற்றிய நாடு இது. “வாசமலரெலாம் ஆனாய் நீயே” என்பது நினைந்து நினைந்து ஓதத்தக்கது. அதுபோலவே தலமரங்கள் (தல விருஷங்கள்) என்று மரம் வளர்க்கும் நெறியை அறிகமுப்படுத்தி வளர்த்தனர். திருத்தலங்கள் அரசவனம், கடம்பவனம் என்று அழைக்கப் பெற்றன. திருத்தலங்கள் இயற்கையான சோலையும் காடும் சூழ்ந்து விளங்கி மிளிர்ந்தன. இப்போழுது கடைகளும் காட்டிரைச்சலும் அமைந்து திருக்கோயிலின் சூழலையே கெடுத்து விட்டன. அதனால் மழைவளம்