பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

363




இருந்தன. நால்வர் பெருமக்கள் இவர்களைத் தனித்தனியே வழிபடவில்லை. பதிகம் அருளிச்செய்யவும் இல்லை, சைவர்கள் சிவத்தையே வழிபட்டனர். ஆழ்வார்கள் திருமாலையே தொழுதனர். இதுதான் சமய சீலம். கடவுளை வழிபடும் துறையில் சிலர் சமரசம் கூறியுள்ளனர். அந்தத் தவறான வழியில் “அரியும் சிவனும் ஒன்று; ஆதலால் யாரையும் வழிபடலாம்; இருவரையும் வழிபடலாம்” என்று கூறுவதும் ஒன்று.

சமரசம் என்பது தன்னுடையதுமீது பற்றும் இன்னொருவருடைய மீது வெறுப்பில்லாதிருப்பதுதான். ஒரு நங்கை கொழுநன், கொழுந்தன் ஆகிய உறவுகளைப் பேணலாம். ஆனால், இருவரையும் கொழுநன் நிலையிலேயே சமரசமாக எண்ணிப் பார்க்க முடியுமா? கொழுநனும் கொழுந்தனும் ஆடவர்களே. ஆகையால், இவனும் கணவனாக இருக்கலாம் அவனும் கணவனாக இருக்கலாம். இரண்டு பேருங்கூட கணவன்மார்களாக இருக்கலாம் என்பது பைத்தியக்காரத்தனமானது.

“கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடியா ரொடல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம்; உன்னையல்லாது எங்கள் உத்தமனே”

என்று மணிவாசகரும்,

“நயவேன் பிறபொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவ ரோடல்லால் - வியவேன்
திருமாலை யல்லது தெய்வம்என்று ஏத்தேன்
வருமாறு நம்மேல் வினை"