பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புடைய காதலின்ப வாழ்க்கையைச் சைவம் வரவேற்கிறது. ஆனால் அதிலேயே அழுந்திக் கிடத்தலை மறுக்கிறது. சிவபெருமானைப் ‘பெண்பால் உகந்தாடும் பித்தன்’ என்று திருவாசகம் பேசுகிறது. சக்தி-சிவ விளக்கத் திருமேனியாக சிவலிங்கத் திருமேனி விளங்குகிறது.

சிவலிங்கத் திருமேனி ஞானத்தின் சின்னம். ஞானம் தீக்கொளுவி எரிகின்ற சுடர் போன்றது. சுடர், மேல், நோக்கியே எரியும். அதுபோல ஞானம் (தகுதி, பண்பாடு அறம்) மேல் நோக்கியே விரியும். அதனை விளக்குவது சிவலிங்கத் திருமேனி.

தமிழ் கருத்துக்கியைந்த மொழி. சைவம் வாழ்வுக்கியைந்த சமயம். சிவலிங்கத் திருமேனி வழிபாட்டுக்குச் சிறந்தது. அதிலும் சுந்தர மகாலிங்கம் கண்ணுக்கினியது. ஆரா இன்பம் அளிக்க வல்லது. வாழ்த்துமின்! வாழ்வித்து வாழுமின்!