பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

373


அவ்விதம் நாம் கற்றுக் கொண்டாலன்றி உலகில் நிரந்தரமான அமைதி ஏற்படுவது முடியாத காரியம். மானிட வர்க்கத்தின் வெவ்வேறு சமய போதகர்களின் உபதேசங்களைப் பக்தியுடன் நாம் அணுகி ஆராய்ச்சி செய்வதே, சமயங்களிடையே பரஸ்பரம் மதிப்பு ஏற்படுவதற்கான தகுந்த வழியாகும்.” என்றார்.

(மகாத்மா காந்தி நூல்கள் 10 பக்: 473)

இங்ஙனம் நமது சமயம், பரந்த பண்பாட்டு நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது. “இந்து சமயம்” இந்தியத் தன்மையாக வளர்ந்து வந்திருக்கிறது. உலகில் பிறந்துள்ள அனைத்துச் சமயங்களையும் தழுவியதே இந்து சயம். இந்து சமயத்தில் “இவர் தேவர், அவர் தேவர்” என்ற இரண்டாட்டு இல்லை. எதையும் ஏற்பது, அணைப்பது என்பதே இந்து சமயத்தின் இலக்கணம். ஒரே கடவுள்! ஒரே ஜாதி! இதுவே இந்து சமயத்தின் உயரிய கோட்பாடு.

இந்த நெறிகளையே,

“உனக்குத் தீங்கு இழைப்பவனுக்கு, அதே அளவு தீமை வரும். பிறரை மன்னித்து, சண்டை போடுவோரிடையே சமாதானம் செய்து வைப்பவனுக்குத் தக்க வெகுமதி அளிப்பது அல்லாவின் பொறுப்பு:”

என்று இஸ்லாமியம் எடுத்தியம்புகிறது.

(இஸ்ஸாம் சர்வோதயப்பிரசுரம் பக். 29)

“நீ உன் மனம் மொழி மெய்களினால் பரமபிதாவை நேசிக்க வேண்டும்; பக்தி செய்யவேண்டும் என்பது அவரது கட்டளைகள் அனைத்திலும் முக்கியமானது. இதே போன்று, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கட்டளை, நீ, உன் அயலானையும் தன்னைப் போலவே நேசிக்க வேண்டும் என்பதே.”

(மத்தேயு 22, 37-39)