பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

375


“திருக்கோயில் இல்லாத ஊர் திருவில் ஊர்” என்று சாடுவார். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழைய வாக்கு, ஏன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாது?

சைவத் தமிழ் மரபு, “சிவமலால் தெய்வமில்லை, சனமலாது அடிமையில்லை” என்று கூறும். திருக்கோயில்கள் கடவுளுக்காக-கடவுள் எழுந்தருள்வதற்காக மட்டும் எழுந்தவையல்ல. கடவுளுக்கும் மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் உறவை ஏற்படுத்துதலே திருக்கோயில் அமைப்பின் நோக்கம். மனிதர்களை-மனித வாழ்வை மேம்படுத்துவது ஒன்று; பிறிதொன்று மனித சமூகத்தை ஒன்றுபடுத்துவது. இன்று இந்த நிலை இல்லாதது ஒரு பெரிய குறை. நகரத்தார் சமூகம் இந்த மரபைப் பேணிக்காத்து வருகிறது. ஆயினும் பழைய மரபு அப்படியே பின்பற்றப்படுகிறது என்று கூறமுடியாது.

திருக்கோயிலைத் தழுவிய சமுதாயத்தையும் சமுதாயத் தைத்தழுவி நிற்கும் திருக்கோயில்களையும் நாம் உருவாக்க வேண்டும். நமது முன்னோர் காலத்தில், திருக்கோயில்களைத் தழுவியே சிந்தித்தனர்; செயல்பட்டனர்; வாழ்ந்தனர். ஒவ்வொருவருக்கும் திருக்கோயிலில் கடமையும் இருந்தது; உரிமையும் இருந்தது. இன்று நமக்குத் திருக்கோயில், வழிபாட்டு நிலையமே தவிர மற்றபடி நமக்குத் திருக்கோயிலில் கடமையும் இல்லை; உரிமையுமில்லை. இந்த நிலையை மாற்றத் திருக்கோயிலில் உழவாரம், திருவலகு, திருமெழுக்கு, நந்தவனம், முதலிய பல்வேறு பணிகளில் நாம் ஈடுபடவேண்டும். தொண்டு செய்ய வேண்டும். ஆன்மாக்கள் சிவனிடத்தில் காட்டும் அயரா அன்பாலும் இயற்றும் கைத்திருத்தொண்டாலுமே வளரமுடியும்; வாழமுடியும்; உறுதியைப் பெற இயலும். இறைவனுக்கு “அன்பலால் பொருள் இல்லை” ஆன்மாக்களுக்குத் “தொண்டல்லால் ஊதியமில்லை” என்பது திருமுறை வாக்கு திருக்கோயில்