பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

381


நாள்தோறும், புவிக் கோளத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிகள், இயற்கை தன்னகத்தே வைத்துள்ள எண்ணரிய வளங்களைக் கண்டு அனுபவத்திற்குக் கொண்டு வருதல் - இயற்கையை ஆண்டு அனுபவித்தல் ஆகியன மனித ஆற்றலின்பாற்பட்ட முயற்சிகள். சிக்கிமுக்கிக் கற்களை உரசித் தியைக் கண்ட மனிதன் - இன்று ஒரு பொத்தானை அழுத்தி இருண்ட உலகை ஒளிமயமாக்குகின்றான். காலமும் தூரமும் மனிதனை-மனித உறவுகளைப் பிரித்து வைத்திருந்தன. இன்று-மனிதன் காலத்தையும் துரத்தையும் வென்று விளங்கும் தொலைபேசி மூலம் பேசிக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தி உறவினை வளர்த்துக்கொள்கின்றான். அன்று காசிக்கும் இராமேஸ்வரத்திற்மே யாத்திரை செல்ல பல்லாண்டுகள் ஆயின. இன்று உலகையே சில மணி நேரங்களில் வலம்வர முடிகிறது. ஒலி, ஒளி, வளி இவற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து இன்பமார்ந்த வாழ்க்கையை நடத்துகின்றான். இயற்கையை வெல்லும் பணியில் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறான். எத்தனை எத்தனை விதமான புத்தம் புதிய அனுபவங்கள், போகங்கள், இன்பங்கள்.

ஆன்மிகம்

இங்ஙனம் வளர்ந்து வரும் மனிதவள ஆற்றல் எல்லையிகந்தது. இந்த மனித வளத்தை நிறைவாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்தல் ஆன்மிகம். ‘ஆன்மிகம்’ என்ற சொல் இன்று வழக்கில் கொச்சைப்பட்டுவிட்டது. இன்று ஆன்மிகம் என்றால் கடவுள் பெயரால் செய்யும் சடங்குகள் என்றாகி விட்டது. கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் ஆன்மிகத்தின் ஒரு பகுதி. ஆன்மிகம் என்பது ஆன்மாவின் உயிர்ப்பு, அறிவு, ஆற்றல், செயல்திறம் ஆகியனவும், அன்பு, சால்பு, பண்பாடு ஆகியனவும் ஆகும். ஆன்மா, அறிவறிந்த ஆள்வினையில் தழைத்து அன்பில் ஒத்துக் கலந்து அருளில் பழுத்து