பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்து மொழிகள்

395


அனுபூதிமான்கள் அகத்துறைப் புரட்சியையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தார்கள்.

எனவே, ஆசைக்கு வரையறை வகுத்து, அன்பும், அறனும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, புறவாழ்வின் தூய்மைக்கு இன்றியமையாத அகவாழ்வை-ஆன்மீக வாழ்வைத் தூய்மையாக்கித் துன்பம் கண்டவிடத்துத் துடித்து-உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து வேண்டியது செய்து-என்றும் எல்லா உயிர்களிடத்தும் பற்றுவைத்து வாழி வாழ்த்தி விடை பெறுகின்றோம்.


சமயத் தொண்டு

இந்த நூற்றாண்டிலே நமது சமயத்தைப் பற்றிய சிந்தனை அருகி வருகிறது. வாழ்வுப் பிரச்னைகளாலும் வேறு சில சூழ்நிலைகளாலும் கடவுள் நெறி பற்றிய எண்ணம் குறைந்து வருகின்றது. சிவநெறித் தத்துவத்தின் வழி வாழ்தல் என்பதும், சைவசமயக் கொள்கை வழித் தொண்டு என்பதும் இப்போது மாறிக் குழம்பிக் கிடக்கின்றன. இது ஒரு விதக் கலப்பாலும்-கலப்பினாலுண்டான சபலத்தாலும் வெள்ளத்தால் அள்ளுண்டு போவதைப் போன்றநிலை எப்படியோ வந்து புகுந்துவிட்டது. நான் பிற மத எழுத்தாளனல்லன். ஆனால் நமக்கென ஒரு கால் தேவை-ஒரு நெறி தேவை என்பவன். கலப்பு என்பது சுயத்துவத்தை அழிக்கவல்லது. உலகியல் நாகரிகங்களின் வரலாற்றிலே ஒன்றையொன்று கெளவி விழுங்கிய செய்திகளைப் படிக்கிறோம். மற்றையக் கொள்கைகளை-நெறிகளைப் பாராட்டுவதோடு, நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலுப்படுத்த உழைக்க வேண்டும்.

சைவசமய வளர்ச்சி பற்றி “வரைபடம்” (Graph) போட்டுப் பார்த்தால் நிலைமை பளிச்செனப் புலப்படும். இந்நிலை மாற-மாற்றப்பட நாம் தீவிரமாக முனைய