பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டாடுகிறோமே தவிர அக்கொண்டாட்ட நாளில் தேவையானவற்றைச் செய்வதில்லை.

கண்ணப்ப நாயனார் குருபூசையில், கண் பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கி வழங்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டால் எவ்வளவு நன்மை பெருகும். நாம் கைக்கொள்ள வேண்டியது நால்வரின் நெறி. நால்வரின் இயக்கம் சமுதாய இயக்கம். நால்வரின் வழிச் சென்றால் நம்மிடையே ஒரு ஒழுங்கு உண்டாகும். நமது மதம் இப்போது ஒழுங்கில்லாமற் கிடக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட மதமாக நமது மதம் மிளிர வேண்டும். வெள்ளையன் தனது மதமான கிறித்தவத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்களை ஒன்றாக்கி இந்துமதம் என அதற்குப் பெயரிட்டான். இதனால் சில தனித்தன்மைகள் கெட்டுவிட்டன. கலப்பு ஒரு போதும் தனித் தன்மைகளைக் காப்பாற்ற உதவாது. மற்றைய மதங்களிடையே உள்ள ஒழுங்கு நம்மிடையே இல்லை. பன்னிரண்டு இலட்சம் இந்துக்களும் ஒன்றானால் ஒரு நல்ல விழுமிய ஒழுங்கு உண்டகாலாம். அப்பொழுதுதான் மேன்மை கொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க வழியுண்டாகும்.

நாம் மதம் மாறியதைப் போன்று வேறு யாராவது மாறியிருக்கிறார்களா? நம்மிடையே எண்ணத் தொலையாத எத்தனையோ பேர் மதம் மாறியிருக்கிறார்கள். நம்முடைய மதத்துக்கு வேறு மதத்தவர்கள் வந்ததுண்டா? நம்மைப் பொறுத்த அளவில் மதமாற்றம் சர்வசாதாரணமாகிவிட்டது. இந்நிலைமாற சைவத் தமிழகம் பாடுபடவேண்டும். சிவநெறி பரப்பும் மடங்கள் ஆன்மாவுக்குத் தலைவனான ஆன்ம நாயகனை வழுத்துவதோடு நின்று விடுவதற்கில்லை - திருமடங்கள் திருத்தொண்டால் சிவநேயச் செல்வர்களை உருவாக்கவே எழுந்தவை. எந்நாளும் சமயப் பிரச்சாரம் செய்து-சித்தாந்த சிவவழி நிற்கவே அவை உதவுகின்றன. மனிதகுலத்துக்கு மாண்புறு தத்துவங்களைப் போதிக்கவே