பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



காலத்தின் கட்டளை

இந்தியா ஒரு நாடு, இன்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியா ஒரு நாடாக விளங்கி வந்துள்ளமையை இந்திய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்தியா பலமொழிகள் பேசும் நாடு; பல மதங்கள் உள்ள நாடு, பல சாதிகள் உள்ள நாடு என்பது, உண்மையே. ஆயினும் மொழி, மதம், சாதி காரணமாக மக்கள் அந்நியராகிக் கொண்டு சண்டை போட்டதில்லை. நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் சிறந்து விளங்கினார்கள். எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாளும் பண்பு ஓர் ஒழுக்கமாகவே ஏற்று ஒழுகப் பெற்றது.

அண்மைக் காலமாக இந்தியாவில் சாதி மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் அவற்றை மையப்படுத்திச் சிறு சிறு எல்லைகளை உண்டாக்கிக் கொண்டு இறுக்கமான உணர்வைப் பெற்றுவரும் தீமை பரவலாக வளர்கிறது. இந்தத் தீயமனப் போக்கை அரசுகளின் அணுகுமுறைகள் வலுப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில், இந்திய மக்களிடத்தில் பரஸ்பர நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பது நமது கடமை. நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் உத்தரவாதத் தன்மையுடைய நல்வாழ்க்கையையும் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கி வைப்பது என்பது நமது தலைமுறையினருக்குக் காலம் தந்துள்ள கடமை. இந்தத் தலைமுறையினருக்கு வாய்த்துள்ள அறிவியல் சார்ந்த கடமை. இந்திய மக்களிடத்தில் சமயச் சார்பற்ற் தன்மையையும் இந்திய ஒருமைப்பாட்டையும் காப்பதுமேயாகும்.

காலம் தந்த இந்தக் கடமையை ஏற்க முன் வந்துள்ளது தமிழ்நாடு திருவருட்பேரவை. தமிழகம் தழுவிய திருவருட்பேரவை உறுப்பினர்கள் தஞ்சையில் சென்ற மாதம் 26, 27ஆம் தேதிகளில் கூடினர். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தக்