பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




12


வானொலியில்


அகப் பகையை வெல்க!

மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல் கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல் நிழல்தானே! இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருந்தியது. “நறுக்கென்று தைக்கும் புறப்பகைகளைக் கடிதில் உணர்ந்த மனிதன் புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறிவிட்டான்.

ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை, தீ சுடுவதில்லை. கொடிய விலங்குகளும் கூட வருத்துவதில்லை; அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி, அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும் பலவற்றைப் பழக்கிய அவன்,