பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

425


தண்ணளியைக் காணோம். தருக்குகளைக் காண்கின்றோம். ஒருமையினைக் காணோம். வேற்றுமையினைக் காண்கிறோம். இந்த அவல நிலைமை எங்கிருக்கிறது! எங்கில்லை! என்று சொல்ல முடியாது. எங்கும் பரவிக் கிடக்கிறது. சமயம் ஒரு தத்துவம் மட்டுமல்ல. அஃது ஒரு வாழ்க்கை முறை.

கடவுள் வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வுப் பொருள். சமயம் உருவங்களோடு நிற்பதல்ல. உருவங்களைக் கடந்த உணர்வால் உணர்வையும் கடந்த இன்ப அன்பால் மனித மனங்கள் மலரினும் சிறந்து மணம் பரப்ப வேண்டும். கனியிலும் சிறந்த கனிவு பெற வேண்டும். தீங்கரும்பினும் சிறந்த சுவை பெற வேண்டும். அப்பொழுதே சமய வாழ்வு முழுமை பெறுகிறது.

இறைவன் தீதற்றோர் திருவுளங்களில் எழுந்தருளவே விரும்புகின்றான். காஞ்சி மன்னன் கட்டிய பெருங்கோயிலை வறிதே விட்டுவிட்டு உள்ளத்தால் தூயதாகிய பூசலார் நாயனார் மனத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான்.

ஆதலால் உள்ளத்தைக் கோயிலாக்குங்கள்! அதனை அன்பினால் மெழுக்கிடுங்கள்! இறைவனை எழுந்தருளச் செய்யுங்கள்! பண்டு கண்ணப்பன் வழங்கிய அன்பினைப் போன்று இறைவனுக்கு வழங்குங்கள் ! அவனுடைய தண்ணருள் சுரக்கும்! புன்புலால் யாக்கை புனிதமாகும்! உங்கள் புலன்களில் இறைவன் தங்கித் திளைப்பான்! திருவருள் சுரப்பான்! இன்பதே சூழும். எல்லோரும் வாழ்க! காட்டக் குறையாது; மாறாக அது வளரும் இயல்புடையது. இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போர்க் கொடுமையினின்றும் மனித உலகைக் காப்பாற்றும் சாதனம் அன்புடமையேயாகும். இம்மைக்கும் மறுமைக்கும் எழுமைக்கும் இன்பம் தருவது அன்புடைமையே யாகும்.

கு.XII.28.