பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

435


செயலாக்கம் நடந்திருக்குமானால் நிலாவுலகத்திற்கு முதலில் தமிழன்தான் சென்றிருப்பான். பாரதியும்தான் பாடினான், “சந்திரன் இயல் கண்டு தெளிவோம்” என்று. நாம் என்ன, அந்த முயற்சியிலா ஈடுபட்டிருக்கிறோம்? கதாகாலட் சேபத்தை யார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இன்றோ? நாளையோ? என்று நாளை எண்ணுபவர்க்கும் சிரிப்பதன் மூலம் சிறு குடலுக்குப் பயிற்சி கொடுக்கும் ‘துர்ப்பாக்கிய"த் துக்கு ஆளானவர்களும் கதாகாலட்சேபம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் அவர்கள் ஒரு சிறு பகுதியினர் என்பதை நாம் அறிய வேண்டும்.

கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் பல கடவுள்கள் வழிபாட்டை எதிர்த்து, ஒருகடவுள் வழிபாட்டை வற்புறுத்தியதாகவும், அதைச் சமயவாதிகள் எதிர்த்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இச்செய்தியில் உதிர்ந்துள்ள உண்மையை ஆராய வேண்டும். சாக்ரட்டீசும் ஒரு கடவுளை நம்மச் சொன்னார்; வழிபடச் சொன்னார். ஆதலால் அவரும் ஒரு சமயவாதியே என்பதில் மறுப்பு இருக்க முடியாது.

சாக்ரட்டீசை மறுத்தவர்களும் சமயவாதிகளே! ஆம்! உண்மைதான்! சாக்ரட்டீஸ் சமய நெறியாளர்; சமயத்தை வாழ்க்கையோடு இசைவித்தவர். அவர் கருத்தை மறுத்தவர்கள் சமயப் புரோகிதர்களும், சமயத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்களுமேயாவர். இந்த இடைவெளி வேறுபாட்டை அறிய வேண்டாமா? சமயமும், கடவுள் வழிபாடும் என்றைக்குப் புரோகிதர்களிடையே சிக்கியனவோ அன்றே புரோகிதர்களிடையே ஏற்பட்ட தொழிற் போட்டியின் விளைவாகப் பல கடவுள்கள் தோன்றின. பின் அப்படிப் படைக்கப்பட்ட கடவுள்களிடையே போட்டிகள் ஏற்படுத்தபட்டன. இவை சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு என்பதை ஆழ்ந்த சமய இயலாளர்கள் உணர்கின்றனர்; உணர்ந்ததோடன்றி எடுத்துக் கூறியும் இருக்கின்றனர்.

பெளராணிகர் சமயம் மிகப் பிற்காலத்தது. சமய நெறியாளர்களின் நெறி தவறுதல் பூர்த்தியடைந்த பிறகு, அந்த