பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறி தவறிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்துவதற்குத் தோன்றிய புராணங்களும் உண்டு. அவற்றைச் சான்றுகளாகக் கொண்டு ஆராயக் கூடாதென்பது ஓர் ஆராய்ச்சி முறை. பெளராணிக வழக்குகளுக்கும், முன்னே கூறியதை இழக்க முடியாமையின் காரணமாகத் தத்துவச் சாயங் கொடுத்த அறிஞர்களும் உண்டு. அந்தத் தத்துவச் சாயங்களின் வாயிலாக இந்தச் செய்திகளைப் பார்க்கும்பொழுது அவை அவ்வளவுக்கு மோசமானவை அல்ல என்பதையும் அறியக் கூடும். இப்படிக் கூறுவதால் நாம் அவற்றை அப்படியே நம்பும்படி கூறுவதாகக் கருத வேண்டாம். கதைகளைவிடக் கதைகளின் கருப்பொருளே நம்புதற்குரியன என்பது திறனாய்வுக்குரிய அடிப்படை.

பாவமன்னிப்பை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்வதாகவும், கழுவாய்களைக் காட்டிப் பாவங்களைச் செய்யத் துரண்டுவதாகவும் சிலர் குற்றம் காட்டுகின்றனர். நமக்கும் தெரிந்தவரையில் மெய்ப்பொருளியல் வழிப்பட்ட எந்தச் சமயமும் பாவங்களுக்குரிய கழுவாய்ச் சடங்குகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாவங்களை நினைந்து வருந்தி அழுது, பாவங்களுக்குரிய காரணங்களிலிருந்து விடுதலை பெற்றாலே பாவத்தினின்றும் விடுதலை பெறமுடியும் என்பது சமயநெறிகளில் முடிவு. நல்லொழுக்கத்திற்குச் சமயம் ஓர் ஊன்றுகோல், ஆனால், நல்லொழுக்கத்திற்கு வித்து உயர்வுற உயர் நலம் உடையவனாகவும் எல்லா உலகமுமாகவும் இருக்கின்ற கடவுள் சார்பேயாம். அப்போதுதான் ஒழுக்கம் வளமுடையதாகவும் உறுதியானதாகவும் இருக்க முடியும். சமய அடிப்படையில் அமையாத ஒழுக்க நெறிகள் இசைக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் முன் அமர்ந்து இசைபயிலும் மாணாக்கன் கையை அசைக்கிறானே, அந்த அசைவு போன்றதே யாரும்.

சமயச் சண்டைகள் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஆம்; உண்மைதான்! மனித குலத்தில் நடந்த போர்களில் சரிபாதி விழுக்காடு சமயங்களின் பெயரால்