பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




14


மண்ணும் விண்ணும்

அருள்நெறியும் பெண்களும்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்று திருவள்ளுவர் வினா எழுப்பவில்லை. விடையையே வினாப் போல எழுப்புகிறார். பெண்ணினம் பாராட்டுதலுக்கும் பெருமைக்கும் உரிய இனம். பெண்கள் எதையும் அதிகமாக விவாதிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்-நம்புவார்கள் வாழ்ந்தும் காட்டுவார்கள். அதனாலன்றோ, சேக்கிழார் பெருமான் பரவையாரைப் பாராட்டுவது போலப் பெண் இனத்தையே பாராட்டுகிறார். சேக்கிழார் பெருமான் சுந்தரர் வாயிலாகப் பரவையாரைப் பாராட்டும் பொழுது, ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று வருணிக்கிறார். கற்பகத் தரு கருதியவை அனைத்தையும் தரும் என்பது மரபு. அதுபோல பெண் தன் கணவன் கருதிய அனைத்தையும் தரவல்ல ஆற்றல் உடையவனாக இருப்பாள் என்பது பெறப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் சமய வாயிலாகச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திய நமது அப்பரடிகளும், திருஞான சம்பந்தரும் பெண்ணினத்தின் பெருமையை, மனையறத்தின்