பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17


இராமநவமிச் சிந்தனைகள்


மதுரை வானொலி ஒலிபரப்பு: 1-4-93

இன்று இராமனைப் பற்றிப் பரவலாகப் பேசப்பெறுகிறது. இராமன், நடையில் உயர்ந்த நாயகன். கடவுளுக்கும் சரி, அவதார புருஷர்களுக்கும் சரி, நமது நாடு வழிவழியாக வழிபாடு செய்து வந்திருக்கிறது. வழிபாடு என்றால் என்ன? நிவேதனங்களைப் படைத்துக் கும்பிட்டால் போதுமா? அவதார புருஷர்கள் ஏன் அவதாரம் செய்தனர்? என்ன செய்தனர்? எதற்காகச் செய்தனர்? என்று அறிந்து அந்தப் பணிகளை நாமும் தொடர்ந்து செய்வதே சிறந்த வழிபாடு! வழிப்படுதல் என்ற சொல்லே வழிபாடு என்றாயிற்று:

இராமன், அரசபதவியைத் துறந்தான். ஒரு நாட்டின் அரச பதவியைக் கொஞ்சம்கூட முணுமுணுப்பு இல்லாமல் “அன்றலர்ந்த செந்தாமரையினை ஒத்த” முகத்துடன் வேண்டாம் என்றான். அதுமட்டுமா? காட்டிற்கும் செல்ல ஒத்துக்கொண்டான். இது, இராமனின் நெறி. இன்றைக்கு இந்த நாட்டில் அதிகார பதவியைத் துறப்பார் யார்? இன்று நாட்டில் நடப்பது நாற்காலிச் சண்டைதானே. நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் நாற்காலியை விடுவதற்கு விரும்பாமல்,