பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்ப்பு தர, மனிதனால் இயலவில்லை. இவற்றைத் தருவது கடவுள் என்று உணர்கிறோம்.

கடவுள்நம்பிக்கை என்பது நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. அறிவுசார்ந்த ஒரு கருத்தேயாம். ஆன்மாவிற்குப் புலனாதல் என்பதற்குப் பலவாயில்கள் உள்ளன. கண்களுக்குக் காட்டி வழிப்புலனாதல், உணர்வுவழிப் புலனாதல். கடவுள் உயிர்க்கு உயிரதாக உணர்வு வாயிலாகப் புலனாதலே தத்துவக் கொள்கை.

சிந்தனையில் உணர்வில் அனுபவித்த கடவுட் காட்சியைப் பொறிகளாலும் அனுபவிக்கத்தான் திருவுருவ வழிபாடு தோன்றியது. சிந்தனையால் வழிபடுதல் ஞானிகளுக்கே உரியது. ஆன்மா, உள்ளம் ஏதாவது ஒன்றைச் சிந்திக்கப் பற்றுக்கோடாக ஓருருவம் தேவைப்படுகிறது. சூன்யத்தைச் சிந்திப்பது சராசரி மனிதர்களால் இயலாது. இந்த அடிப்படையில் தான் திருவுருவ வழிபாடு கால் கொண்டது. உருவவழிபாட்டில் உளவியல், அறிவியல் அடிப்படை அமைந்துள்ளது. நமது சமயம் உருவவழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும் அருவநிலையில், உருவமற்றநிலையில் வழிபாடு செய்வதை மறுத்துவிடவில்லை. திருவுருவம் - கடவுள் அல்ல. அருள்பாலிக்கும் கடவுள், திருவுருவத்தை இடமாகக் கொண்டு அருள்கின்றான்.


“இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்”

என்ற திருவாசக அடிகளைச் சிந்தனை செய்க, திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவன் எனவே காணவேண்டும்.

இந்த உலகில் ஒன்று பிறிதொன்றாக மாறுகிறது. மாறும் பொழுதெல்லாம் மூலப் பெயர் மறைந்து போகிறது. மாறிய நிலையின் பெயரே நிலைபெறுகிறது. தொழில்நுட்பம தெரிந்தவன் இரும்பை எடுத்து ஒலியைப் பெருக்கித்தரும் கருவியாக அமைத்து “ஒலிபெருக்கி” என்று பெயர் சூட்டு