பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபுகளைக் காப்பது நமது கடமை

465


வாழ்க்கைமுறை. இந்து சமயம் ஒரு பிரசார சமயமாக இருந்ததல்ல; இருக்கவும் இயலாது. பெளத்த, சமண மதங்கள் தோன்றிய பிறகுதான் நமக்கு மத நிறுவனங்கள் தோன்றுகின்றன. வேதங்களும் கூட வழிவழியாக வந்தவையேயாம். எழுதி, மலிவுப் பதிப்பு என்று விளம்பரப்படுத்தி விற்றவையல்ல. இந்து சமயம் கடவுள் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டது. இந்த அடிப்படையில் எழுந்த திருக்கோயில்கள் பலப்பல. திருக்கோயில்களே நமது சமய நாகரிகத்தின் அடித்தளம். திருக்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எல்லை அளவுக்கு நமது சமூக வாழ்க்கையில் திருக்கோயில்கள் இடம்பெற்றன.

திருக்கோயில்களில் ஆகமங்கள் - தந்திரங்கள் வழி நாள்தோறும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஆண்டில் சில சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் நடந்துவருகின்றன. இவைகளுக்கு என்று நெறிமுறைகள் மரபுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்த நெறிமுறைகள், மரபுகள் முறை பிறழாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் இந்த மரபுகளை மீறாமல் பேணிக் காத்து நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள். ஆனால் நாம் நமது விருப்பம் போல மரபு மாற்றவோ நீக்கவோ, முயன்றால், பலரும் பலவிதமாக எண்ணவும் மாற்றவும் முற்படுவர். முடிவாக ஒன்றுமே இல்லாமல் போய்விடும். அதனால், மரபுகளைப் பேணுதல் என்பது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல; அவசியமும்கூட.

சமயமும் சமய வழிப்பட்ட சமூகமும் ஒருங்கிணைந்து வலிவும் பொலிவும் பெற வேண்டுமாயின் மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். இங்கு நாம் மரபுகள் என்று குறிப்பிடுவது பழக்கங்களை - வழக்கங்களை மையமாக வைத்து மட்டும் அல்ல. சமய நெறியை பாதுகாத்து அரண் செய்யும் நூல்கள், வழிவழியாக அங்கீகாரம் பெற்ற நூல்கள், பல உள்ளன. கடைசியாக நமக்குக் கிடைத்தவை பன்னிருதிரு