பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மரபுகளைக் காப்பது நமது கடமை

467


வரவேற்க இயலாத ஒன்று. அப்படியே மீற அனுமதித்தால் பலரும் மீறுவர் கடைசியில் நமக்கு என்று ஒன்றும் இருக்காது. நமது திருக்கோயில் மரபுகளும் சமுதாயம் நிலைகுலைந்து விடும்.

மிகப்பெரிய நிலையில் அடிவைக்கக்கூசிய இடத்தில் இன்றைய தலைமுறை புகுந்து விளையாடுகிறது. விமர்சன உலகம் எல்லைகளைக் கடந்து செல்கிறது. விளக்கங்கள், விளக்கையே கெடுத்துவிடும் போலத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நமது சமய நெறியிலும், நெறிவழிப்பட்ட மரபுகளிலும் நம்பிக்கை உடையவர்கள் சான்றோர்கள் மரபுகளைக் காப்பாவர்களாகவும், ஒருமை நலச் சிந்தனை யாளர்களாகவும் இருத்தல் அவசியம். சமய ஆர்வம், சமய வளர்ச்சியில் ஈடுபாடு, வரவேற்கத்தக்கதே! ஆயினும், இந்த ஆர்வம் மரபுகளைச் சார்ந்தே வளரவேண்டும். அதுவும் திருக்கோயில், திருக்கோயில் மரபுகளைக் காத்தல் என்பது விழுமிய கடமை. இந்த மரபு என்ற கற்களின் வரிசையில் ஒரு கல்லை இடையில் உருவினாலும் சுவர் முழுதும் மடமட என்று சரிந்துவிடும் இந்தத் தவற்றை நாம் ஊக்கமிகுதியால் செய்துவிடக்கூடாது.

திருக்கார்த்திகை ஒளி விளக்கு, திருவண்ணாமலையில் ஏற்றுவது என்ற மரபு தொடங்கியது. சிவன் ஒளி வடிவானவன். ஓங்கி உயர்ந்து அகன்று உள்ள சோதியினன் என்பது தத்துவம். நமது சமய நெறியில் ஒளி, உலகப் பொது! ஒளி நுழையாத இடம் இல்லை; ஒளியைப்பயன்படுத்தாத உயிர்க்குலம் ஒன்றுகூட இல்லை! அதுபோலவே, நமது சமயநெறியில்தான் தீ வேட்டல் (யாகம்) உள்ளது. ஐம்பெரும் பூதங்களில் தீ மட்டுமே துய்மையானது எந்தச் சூழ்நிலையிலும் துய்மையைக் காப்பாற்றிக் கொள்வது. நிலம், அழுக்கொடு சேர்ந்தால் அழுக்காகும். காற்று, துர்நாற்றத்துடன் சேர்ந்தால் துர்நாற்றம் வீசும். ஆனால் தீ - நெருப்பு அழுக்கொடு சேர்ந்தால் தன்னைச் சேர்ந்த பொருளையும் துய்மை செய்யும். தன்னையும் தூய்மை கெடாமல்