பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாதுகாத்துக் கொள்ளும். இந்தத் தத்துவத்தின் விளக்கமாக, கார்த்திகை மாதக் கார்த்திகையில் ஒளி விளக்கேற்றுவது, சொக்கப்பனை கொளுத்துவது என்ற மரபுகள் தோன்றின.

தமிழ்நாட்டில் எல்லாத் திருக்கோயில்களிலும் ஒளி விளக்கேற்றுகின்றனர். வீடுகள் தோறும் விளக்கேற்றுகின்றனர். மலைக்கோயில் உள்ள ஊர்களில் மலைத்திருக்கோயிலும் விளக்கு ஏற்றுகின்றனர். திருவிளக்கு ஏற்றும் இடம், ஏற்றுவோர், ஏற்றும் நேரம் ஆகியன எல்லாம் நியதி செய்யப் பெற்றுள்ளன; நமது முன்னோர்களால் திருக்கோயில்களில் இன்று வரை பல்வேறு மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டபோதிலும் மரபு மாறாமல் நடந்து வருகின்றன. அந்த மரபுகளை அப்படியே காப்பாதுதான் நமது கடமை!

திருப்பரங்குன்றத் திருத்தலம், சங்ககாலத்திலிருந்து புகழ்பெற்று வளர்ந்து வந்துள்ள திருக்கோயில்; தமிழ்நாட்டு மக்களின் ஆர்வம் நிறைந்த பத்திமைக்குரிய திருக்கோயில். இத்திருக்கோயில் வழிவழி வரும் மரபுகள் வழி இன்றுவரை நடந்து வந்துள்ளது. இனிமேலும் நடக்கவேண்டும். திருக் கோயில் மரபுப்படி திருக்கோயிலில் விளக்கேற்றுவது என்பது தான் முறை. இந்த மாதிரி நிகழ்வுகளில் நாம் தனிப்பட்ட முறையிலோ கூட்டாகவோ தலையிடுதல் என்பது விரும்பத்தக்கதல்ல. காலப்போக்கில் திருக்கோயில் மரபுகளை - சமூக நியதிகளை எளிதில் கடக்கலாம் என்ற உணர்வு பலருக்கும் தோன்ற வாய்ப்பளித்துவிடும். இது வரவேற்கத்தக்கதல்ல. திருப்பரங்குன்றம் திருக்கோயிலின் மரபுவழி மலைவிளக்கு ஏற்றுவர் என்று நம்புகின்றோம். தமிழ் மக்கள் திருக்கோயில்களையும், திருக்கோயில் மரபுகளையும் காக்கத் துணை நிற்பர் என்ற நம்முன்னணியினரின் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வரவேற்க இயலவில்லை வரலாற்றுப் பிழையாகி விடுமோ என்ற அச்சம்.

“நன்றாற்ற றுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை”.