பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆன்மிகம்

479


சலனமாக அசைந்துகொண்டேயிருக்கும். உடல் தயவில்லாமல் கூட பயணம் செய்து கொண்டேயிருக்கும். “சென்ற விடத்தால் செலவிடாது”, “மனத்துக்கண் மாசிலன் ஆதல்”, “மனமே உனக்கென்ன வாய்?” என்ற ஆன்றோர் வாக்குகளை எண்ணுக நெருப்பை எண்ணெய் விட்டு அணைக்க முடியுமா? அதுபோலத்தான் ஆசைகளிலும் கெட்ட எண்ணங்களிலும் உழலும் மனத்தை அடக்கமுடியாது. ஏன்? மனித வாழ்க்கையில் எந்தப் புலனையும் பொறியையும் சராசரி மனிதனால் அடக்கவே இயலாது. அறிவார்த்த நிலையிலும் பூரண ஞானத்துடன் பொருந்தாத கட்டுப்பாடு, உண்மையான கட்டுப்பாடு ஆகாது. பாசி படர்ந்த தண்ணீரில் விழுந்த கல், சற்றே பாசியை விலக்கியதை ஒத்ததுதான்! பூரண கட்டுப்பாடுகள் வராமையின் காரணமாகத்தான் நமது மதப் பழக்க வழக்கங்களில் மடமைத்தனம் அதிகமாயுள்ளன. வேதங்களையும் உபநிடங்களையும் தேவாரங்களையும் திவ்வியப் பிரபந்தங்களையும் படிக்கின்றோம். ஆனால் அவைகள் காட்டும் திசையில் நமது வாழ்க்கையை நாம் நடத்துவதில்லை. எப்படியோ மீண்டும் மீண்டும் பழக்கம் வழக்கம் என்ற அடிப்படையில் மடமைத் தனங்கள் ஆட்கொண்டு வருகின்றன.

ஆத்மா “அகத்தை”ச் சுழல வைத்துக்கொண்டிருக்கிறது. அகத்தையுடைய மனிதன், மற்றவர்களையும் வாழ்விட மாட்டான். அகத்தைப் பரிபூரணமாக நீங்கிய வாழ்க்கையே ஆன்மிக வாழ்க்கை அகந்தைக்கு மாற்று அன்புதான்! தாழ்வெனும் தன்மையோடு தொண்டு செய்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினால்தான் வாழ்வு நிறைவாகும். அன்பு, ஒன்று தான் துன்பங்களையும் துயரங்களையும் எல்லைகளையும் கடந்து நிற்கும். தியாகங்கள் செய்ய அன்பு தேவை. இந்த அன்புக்காக ஏங்கிய கடவுளர் கூட வைகுந்தத்தையும் சொர்க்கத்தையும் துறந்துவிட்டு மண்ணுக்கு வந்தனர். நாம் தொழும் கடவுள்கள் கூட