பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




25


தமிழ் நெறியும்-லெனினியமும்


லெனினியம், எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வோடு ஆராய்ந்து முடிவெடுப்பதாகும். இரண்டும் இரண்டும் நாலு என்று விடை வருவதைப் போல் எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினியத்தின் அடிப்படை விதி. லெனினியம், “விரிந்தும் பரந்தும் கிடக்கின்ற இந்த உலகம் இயற்கயைானது” என்கிறது. இந்த உலகத்தைப் படைத்த-இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னொரு சக்தி உண்டென்பதை நம்புவதில்லை. இல்லை. நம்ப மறுக்கிறது! அதோடு. “இந்த உலகம் ஒரு மாதிரியாக இல்லை; வேறுபட்டுக் கிடக்கிறது; முற்றிலும் முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை; அது வளர்கிறது; மாறி வருகிறது; முற்றிலும் இன்பமாக இல்லை. துன்பக் கலப்பு இருக்கிறது. இந்தக் காரணங்களால் உலகம் இயற்கையோம்.” என்பது லெனினியத்தின் தத்துவங்களுள் ஒன்று.

தமிழிலக்கிய மரபுகளைப் பொறுத்தவரையில் இந்த உலகம் பற்றிய கருத்து ஒரு மாதிரியாக இல்லை. காலத்திற்குக் காலம் மாறுபாடுகிறது. ஒரு நூலுக்குள்ளேயே கூட இரண்டு விதக் கருத்துக்கள் பேசப்படுகின்றன. உலகம் இறைவனால்

கு.XII.32.