பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெறியும்-லெனினியமும்

491



இதனை மேற்கூறிய “நீலமேனி” என்ற பாடலில் “தாள்நிழற்கீழ்” என்பதால் அவன் தாளாண்மையில் தோன்றிற்று உலகம் என்றும் கூறலாம். ஆயினும், ஆசிரியர் முகிழ்ந்தன என்று கூறுவதால் அவனுடைய தாளாண்மையால் தோன்றிற்று என்று பொருள்கொள்ள முடியவில்லை. காரணம், 'முகிழ்த்தன' என்ற சொல் தன்வினைச் சொல்லே பிறவினை அன்று. ஆதலால், உலகம் இறைவனுடைய தண்ணளியின் நிழலில் தானே தோன்றிற்று என்று கொள்ளுதலே சிறப்புடைய பொருளாகும். உலகம், தானே தோற்றிற்று என்ற லெனினியத்தோடு இந்தக் கருத்து இசைந்திருக்கிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய புறப்பொருள் வெண்பாமாலையும் இந்த அடிப்படையிலேயே உலகத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது.

“வையகம் போர்த்த வயங்கொளிநீர்-கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பது பாடல். இந்தப் பாடல் மூலம், உலகம் நீர்ப்பரப்பாக முதலில் இருந்தது. பின்பு பரிணாம வளர்ச்சியில் கல் தோன்றிற்று. கல் கரைந்தும் உடைந்தும் மண்தோன்றுதற்கு முன்பு தமிழினம் தோன்றிற்று என்று விளங்குகிறது. ‘கல்தோன்றி மண் தோன்றி என்ற சொற்களில் மூலம் நானே தோன்றிற்று எனபதே பெறப்படுகிறது. தோன்றுதல் என்ற சொல்லும் தன்வினைச் சொல்லேயாம்.

அப்பரடிகள் “இறைவன் உலகத்தைப் படைத்தான்” என்று ஒரேவழி கூறியிருந்தாலும், மிகுதியாக 'இறைவனே உலகம்' என்ற கருத்தும், உலகமே இறைவன் என்ற கருத்தும் தான் அப்பரடிகள் திருமுறையில் அதிகம் பயிலுகிறது. இறைவன் படைக்கப்பட்டவன் அல்லன். ஆதலால், உலகமே இறைவன் என்ற கருத்தால் உலகம் படைக்கப்பட்ட தில்லை என்பதும் பெறப்படுகிறது. “எல்லா உலகமும் ஆனான்” என்றும்,