பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெறியும்-லெனினியமும்

501


வண்ணத்தில் வளர்ச்சியுமில்லை மாறுதலுமில்லை. மனிதவுயிர்கள் அப்படியா வாழ்ந்து கொண்டிருக்கின்றன? என்ற வினாவுக்கு இதுவரையில் விடை கிடைக்கவில்லை.

மேலும், உயிர்த் தொகுதிகளுக்கிடையில் எண்ணத் தொலையாத வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் இங்கு வேறுபாடுகள் என்று சொல்லும் பொழுது, இயற்கையில் உள்ள வேறுபாடுகளையே குறிக்கின்றோம். செயற்கை வேறுபாடுகளையல்ல. ஆண் பெண் என்ற பால் வேற்றுைைம இயற்கை புழு-பூச்சி என்ற வேறுபாடு இயற்கை பறவை-விலங்கு என்ற வேறுபாடு இயற்கை மாடு-மரம் என்ற வேறுபாடு இயற்கை. இத்தகைய வேறுபாடுகளுக்கு அடிப்படை என்ன? மேலும் அறிவு, ஆற்றல் இவைகளில் வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறோம். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? பிறந்த நாள் தொட்டுப் பெருநெறி பற்றி ஒழுகியவர்கள் துன்புறவும் சிறுமையே செய்தவர்கள் மகிழவும் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன?

இந்த வினாக்களுக்குச் சமயநெறியைச் சார்ந்தோர்கள் முற்பிறப்பின் புண்ணிய பாவத்தைக் காரணமாகக் காட்டுவார்கள். உலகாயத நெறியைச் சார்ந்தவர்கள் முற்பிறப்பு பிற்பிறப்பு இவைகளை நம்புவது இல்லை. அங்ஙனம் கூறுவது சமயநெறியாளர்களின் மயக்கம் நிறைந்த செயல் என்றே கூறுகின்றனர். சமயிகளுடைய இந்தக் வற்று, “முயற்கொம்பி லேறி ஆகாயப் பூவைப் பறித்தால்” என்ற கூற்றில் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் இருக்கிறதோ அவ்வளவு பைத்தியக் காரத்தனம் இதிலும் இருக்கிறது என்று குற்றம் காட்டுகின்றனர். அவர்கள் திரும்பவும் கேட்கிறார்கள். “நமது கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. இந்து ஐந்து விரல்களும் ஒரு மாதிரியாக இல்லை; ஒன்று நீண்டும் பிறிதொன்று குட்டையாகவும் தம்முள் வேறுபட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? என்ற இந்த வினாவுக்கு விடை சொல்வது