பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவை. நமக்குத் தேவையான படைக்கலங்களை நாம் மிகுதியான பொருள் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. படைக்கலம் வாங்க ஏராளமான பொன்னும் பொருளும் தேவை. அன்றாட வாழ்க்கையில், சிக்கன முறையினைக் கையாண்டு பொருளைச் சேமித்துச் சீன அரசாங்கத்தை விரட்டியடிக்கத் தரவேண்டும். மாந்தர்க்கு அழகு தருவது சுதந்திர வாழ்க்கையே யாகும். சுதந்திரத்திற்கு ஆபத்து என்ற குரல் கேட்கும் பொழுது அணிகலன்களில் அழகைப் பார்க்கலாமா? தாயகம் காக்கத் தங்கம் தாருங்கள். அரசினர் ஒவ்வொரு நகரத்தையும் கிராமத்தையும் வலிமையிலும் வளத்திலும் தற்காப்பிலும் சிறந்து விளங்கும் கோட்டை களாக்கத் திட்டமிட்டுத் திறனுடைய தொண்டர்படை அமைக்கின்றனர். நெஞ்சில் உரமும் உறுதியும் உடையவர்கள், போனால் வராத-வர முடியாத இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொண்டர் படையில் சேருங்கள்! சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடாத-ஈடுபடமுடியாமல் சுதந்திரத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற பலருக்குத் தேசத் தொண்டு செய்ய இது ஏற்ற தருணம்.

நாற்பத்தாறு கோடி மக்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிற நேருவே நமது தலைவர். அவரது தலைமையை நாம் ஏற்றுப் போற்றி, நாட்டுக்கேற்ற நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து-உள்நாட்டின் வளர்ச்சிக் குரிய் திட்டங்களை நிறைவேற்றிப் பொன்னும் பொருளும் குவித்து எல்லையில் தொல்லைதரும் சீன அரசாங்கத்தை விரட்டுவது நமது கடமை.


[1]14. தேசீய ஊதியக் குழு

நாடு விடுதலை பெற்ற பிறகு உழைத்து வாழ்வோர் வாழ்க்கை வளராது போனாலும் உயர்ந்திருக்கிறது. அடிக்கடி


  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை!