பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

87


வரையில் நிதிநிலை சிக்கலாகவே இருக்கும்; நெருக்கடியும் தீராது. இப்போது நடுவண் அரசு தேசீய அளவில் ஊதியம் நிர்ணயிக்கும் கொள்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முயற்சி! நாடு முழுவதுக்குமாக நிலையான தன்னாட்சி உரிமையுடைய ஊதியக்குழு இருத்தல் வேண்டும். இந்த ஊதியக்குழு அவ்வப்பொழுதுள்ள விலைப்புள்ளியை அனுசரித்தும் நாட்டின் பொருளா தாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும் ஊதியத்தை நிர்ணயிக்கவேண்டும். ஊதியக் குழுவின் முடிவுகளை அரசும் அலுவலர்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

-‘மக்கள் சிந்தனை’ 1-3-81


15. [1]தொழிலாளர் நலம்

ல்லனவற்றை நாடி வாழத்தான் நமக்குக் கடவுள் வழிபாடு இருக்கிறதே தவிர, தீயனவற்றைத் தேடித் திரிந்து பெறுவதற்காக அல்ல. வாழ்க்கையிலே உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமைக்குச் சிந்தனையற்ற போக்குத்தான் காரணம். வாழ்வில் சிந்தனையில்லாது போனால் வரும்பொருள் சேராது-வளமும் பெருமையும் கிட்டா. நாளும் உழைத்ததைச் சேமித்து நல்வாழ்வுவாழ ஆசைப்பட வேண்டும். பாடுபட்டு உழைத்து-அதற்குரிய பயனை அனுபவியாமற்போனால் அது மனிதத்தன்மையாகுமா? உங்களது வாழ்க்கைக்கு நல் வாழ்வுக்கு வழி சொல்லக்கூடிய பெரியாரை உங்களிடத்திலே தேடிப்பிடித்து-அவர் சொல்லும் அனுபவ உண்மைகளுக்குச் செவிசாய்த்து நீங்கள் வாழவேண்டும். வாழ்க்கைத் துணையில்லாது போனால் வாழும் இல்லறம் சிறக்காது என்பார்கள். இல்லாள் இல்லாத இல்லறம் இடுகாட்டுக்கு ஒப்பாகும் என்பது நம்மவர் வழக்கு. இதுபோல் நல்ல


  1. முத்து மொழிகள்