பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

பெருமுயற்சியின் பெருவிளைவே இப்பெருந்திட்டம். குன்றக்குடி அடிகளாரின் செயலராக, நிழலாக இருந்த பரமகுருவின் பங்களிப்பு பெரியது. மிகப்பெரியது. அவர் இன்றி இந்நூல்வரிசை வெளிவந்திருக்காது. அடிகளாரின் அசைவுகள், நினைவுகள் அனைத்தும் பரமகுருவின் நெஞ்சில் பதிவாகி விட்டன.

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வர் முருகசாமி முனைந்து நின்று இம்மாபெரும் திட்டத்தை வெற்றிபெறச் செய்தனர். சமயநூல்களில் தேர்ச்சியும் அடிகளார் நூல்களில் பயிற்சியும அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் உடைய முருகசாமி முன்னின்று ஆற்றிய பணிகள் பல.

இந்த 16 தொகுதிகளுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெருமக்கள் 15பேர் அரிய ஆய்வு மதிப்புரைகள் வழங்கியுள்ளனர். அவர்கள் வருமாறு:

தொகுதி 1, 2. சிலம்பொலி செல்லப்பனார்
                   3. முனைவர் தமிழண்ணல்
                   4.முனைவர் வா.செ. குழந்தைச்சாமி
                   5. முனைவர் ஒளவை நடராசன்
                   6. முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்
                   7. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
                   8. முனைவர் வை. இரத்தினசபாபதி
                   9. தருமபுரம் ஆதீனம் தவத்திரு சண்முக தேசிக
                       ஞானசம்பந்தர்
                   10. முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
                   11. முனைவர் கு. சுந்தரமூர்த்தி
                   12. தவத்திரு அமுதன் அடிகள்
                   13. தவத்திரு ஊரன் அடிகள்
                   14. முனைவர் இ. சுந்தரமூர்த்தி
                   15. முனைவர் க.ப. அறவாணன்
                   16. புலவர் இரா. இளங்குமரன்

நூல் நுவலும் பொருள். அடிகளின் எழுத்துக்கொடை, சமய ஞானம், மனிதநேயம், பொதுநல நோக்கம், அறிவியல் அணுகு முறை, சமூகப் பணி பற்றித் திறனாய்வாளர்கள் நுண்ணாய்வு