பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மலைபோல் குவிந்து கிடக்கும் தென்னை நார்கள் கழிவுப் பொருள்களிலிருந்து உரம் தயார் செய்யலாம். வீட்டுச் சுவர்களுக்கு அலங்கார அடைப்புப் பொருள்கள் தயார் செய்யலாம்.

தமிழ்நாட்டில் முந்திரி அடிப்படையிலான தொழில்களுக்கு நல்லவாய்ப்பு இருக்கிறது. முந்திரிப் பழங்களிலிருந்து சாறு - ஜாம் முதலியன தயார் செய்யலாம். இது நல்ல உணவு. முந்திரிக் கொட்டைத் தோலிலிருந்து எண்ணெய் எடுத்தல் நல்ல இலாபகரமான தொழில், முந்திரி எண்ணெய்யிலிருந்து மரங்கள், இரும்புகளைப் பாதுகாக்கும் நல்ல வண்ணப் பூச்சு எண்ணெய் தயார் செய்யலாம். இந்த வண்ணப்பூச்சு எண்ணெய் இரும்புகள் துருப்பிடித்து அழியாமலும் மரங்கள் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கும். நல்ல சந்தை வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தியர்களின் பழக்கம் உணவு உண்பதைவிட இடைத் தீனி அதிகம் தின்பதுதான்! இது இன்றையச் சந்தையில் எளிதில், அடக்கவிலையில் கிடைப்பதில்லை. குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு எளிதில், குறைந்த விலையில் நிறைந்த ஊட்டச் சத்துணவுத் தன்மையுடைய மிக்சர் தயார் செய்து விற்பது ஒரு நல்ல தொழில். அது மட்டுமன்று. நாட்டுத் தொண்டும் ஆகும்.

நறுமணம் நுகர்தல் இதயத்திற்கு வலிமை சேர்க்கும்; மன அமைதியைத் தரும். இன்று, நறுமணப் பொருள் நுகர்வு பெற, சராசரி மனிதர்களால் இயல்வதில்லை. ஏன்? எளிமையாகக் கிடைப்பதில்லை. நாம் அண்மைக் காலமாகப் பணமதிப்பீட்டுச் சமுதாய அமைப்பில் இருப்பதன் காரணமாக இயற்கையோடிசைந்து வாழ்தலை மறந்து விட்டோம். மேடைகள் தோறும் மலர்மாலைகளுக்குப் பதில் துண்டுகள் போர்த்தும் பழக்கம் வந்ததால் மலர்ச் செடிகளை வளர்க்கும் பழக்கம் அருகிப் போயிற்று. மலர்களிலிருந்து