பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

107


அறிஞர், கிராமியப் பொருளாதார மேதை. டாக்டர் ஜே.சி. குமரப்பா அவர்கள், உலக நாடுகளின் பொருளாதாரச் சித்தாந்தங்களைத் துறைப்போகக் கற்றுத் தெளிந்தவர். ஜே.சி. குமரப்பா அவர்களின் கிராமப் பொருளாதாரக் கொள்கை வெற்றி பெற்றால் நது நாடு, தன்னிறைவுள்ள நாடாக மாறி சிறந்து விளங்கும்.

மேதை குமரப்பாவின் கிராமப் பொருளாதாரக் கொள்கையில் விவசாயம் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. ஏன்? மனித குலத்தின் முதல் தேவை உணவு. அடுத்த தேவை உடை, உணவு, உடை அடிப்படையிலான உற்பத்தி-இவை சார்ந்த தொழில்கள் கிராமங்களில் முறையாக வளர்ந்தாலே கிராமங்கள் வளரும். வேலைகள் கிடைக்கும், தன்னிறைவுள்ள கிராமங்களாகும் என்பது மேதை குமரப்பா அவர்களின் கருத்து. இது நூற்றுக்கு நூறு உண்மை.

கிராமப் பொருளாதார மேதை குமாரப்பா அவர்கள் கிராம வளர்ச்சிக்கு, கூட்டுறவைப் பெரிதும் நம்பினார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பலநோக்குக் கூட்டுறவு சங்கம் இருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. “பண அடிப்படையிலான பொருளாதாரத்தைவிடப் பொருள் அடிப்படையிலான பொருளாதார இயக்கங்களே-வங்கிகளே -கூட்டுறவு அமைப்புகளே கிராமத்துக்குத் தொண்டு செய்ய இயலும்” என்பது மேதை குமரப்பா அவர்களின் கருத்து. இன்று நமது வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டு இயங்குதல் வேண்டும். அதாவது, தொழுஉரம் தயாரிப்பதிலிருந்து வேளாண்மையின் அனைத்துத் துறைகளிலும் துணையாக, இந்த, தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அமையவேண்டும்.

இன்று நீர்ப்பாசன நிர்வாகம் அரசின் பொறுப்பிலும் இல்லை; கிராமத்தின் பொறுப்பிலும் இல்லை; வல்லாளர்கள் கையில் இருக்கிறது. கிராமப்புற நீர்ப்பாசன