பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மேதை குமரப்பா அவர்கள் கிராமங்கள் ஒருங்கிணைந்த நிலையில் வளரவேண்டும் என்று விரும்பினார். மேதை குமரப்பா அவர்களின் கொள்கை வழி கிராமங்கள் வளரவில்லை. குன்றக்குடி வளர்ச்சிகூட மேதை குமரப்பா அவர்களின் சித்தாந்தப்படி அமையாதது. ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பெறும்.

இந்தியாவின் செல்வக் களஞ்சியம் கிராமங்களே! கிராமங்கள் வளர்வதற்குரிய திட்டங்களை மேதை குமரப்பா அவர்களின் கருத்துவழி, திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்துவது சாத்தியமே! நமக்கு வேண்டியது மனம் ஒன்றே!


20. [1]சர்வோதயம்

ரோப்பிய நாடுகளின் சித்தாந்தங்களையும், மனித இன வரலாற்றையும் விட பாரதத்தின் சித்தாந்தங்களும் மனித இன வரலாறும் மிகப்பழமையுடையன. சிக்கல்களுக்கு மேலெழுந்த வாரியாகத் தீர்வு காண்கின்ற சில நாடுகள் உண்டு. நமது நாட்டு மேதைகள் சிக்கல்களை நன்கு ஆழ்ந்து சிந்தித்து அவை தீர்வதற்குரிய வகையில் இறுதி முடிவு கண்டிருக்கிறார்கள். அத்தகு மேதைகளில் சிறந்து விளங்குபவர் அண்ணல் காந்தியடிகள்.

காந்தியடிகளின் புரட்சி இளவெயில் போல; பொதிகை மலைத் தென்றல் போல. என்றாலும் அது வலிமையும் உறுதியுமுடையதாக விளங்கியது.

காந்தியடிகள் தலை சிறந்த ஞானி. அறியாமை கலப்பில்லாத தூய அறிவிற்குத்தான் ஞானம் என்று பெயர். அது பேரொளியணையது.


  1. பொங்கல் பரிசு