பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தகுந்தாக அமையாவிடின் துன்பம் அகலாது. இன்பம் வந்து சாராது. ஆதலால், வள்ளுவர் நெறியில் வையகத்தை வாழ்விப்போமாக, சமவுடைமைத் தத்துவமே மனம் என்ற மாளிகையில் இருளகற்றும் ஒளிவிளக்கு ஆகும்! எனவே சமவுடமைத் தத்துவத்தை நாம் நம் அரிய வாழ்க்கையில் தவறாது கடைப்பிடித்து வாழ்வோம்! சிறப்புறச் செயலாற்றி மகிழ்வோம்!

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

–குறள் 215


செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

–குறள் 101

செந்தமிழ்க் குறளோசை திசையனைத்தும் பரவிட வேண்டும்
செம்மைசேர் பொதுமொழியென்றே தேர்ந்திட வேண்டும்.

–அரசு


23. [1]மானுடம் மகிழ்வாக வாழ தீர்வுக்குரிய ஒரே வழி!

மானுடம் இன்று மகிழ்வாக வாழவில்லை; வாழ அனுமதிக்கப்பெறவில்லை என்பது உறுதி. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தனி உடைமைச் சமுதாய அமைப்பு. பிறிதொன்று, ஆதிபத்திய அரசுகளைக் கொண்ட சமுதாய அமைப்பு. இந்த அமைப்பு முறையே சமுதாயத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றக் காரணமாகும். இந்த அடிப்படையில் தோன்றும் உணர்ச்சிகள், மொழி, சமயம், ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டு செயற்பாட்டு நிலையை அடை


  1. சிந்தனைச் சோலை