பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



24. [1]பன்னாட்டுத் தொடர்பு

லகம் ஒன்றே; மாந்தரினமும் ஒன்றே. “எல்லா உலகமும் ஆனாய் நீயே!” என்ற வழக்கு, உறவு கலந்த உரிமையின் அடிப்படையில் அமைந்த வழக்கே மொழி, சமயம், அரசியல் முதலியவற்றின் அடிப்படையிலும் ஒரோவழி உலக நிலப்பரப்பின் ஊடே எழுந்துள்ள உயர்ந்த மலைகள் காரணமாகவும் - விரிந்துள்ள ஆழ்கடல்கள் காரணமாகவும் உலக நிலப்பரப்புத் துண்டு பட்டுள்ளது. ஆனாலும் மாந்தர், மாந்தரே! மாந்தருக்கு அறிவியல் தலைப்பட்ட காலத்திலிருந்து உலகம் தழீஇய நிலையில் நாடுகளிடையே தொடர்புகளை வளர்த்து, உறவுகளைப் பேணிக் காக்கத் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

இத்துறையில் அறிவியல் உலகம் காலத்தையும் தூரத்தையும் இயற்கைத் தடைகளையும் கடந்து ஒப்பற்ற சாதனைபுரிந்துள்ளது. ஆயினும் மனிதகுலம் உடைமைகள், அதிகாரங்கள், குறுகிய பற்று பாசங்கள் ஆகியவற்றால் அறிவியல் உலகம் சாதித்த உலகந்தழிஇய தொடர்புகளைத் துண்டாக்கவும், உறவுகளை உருக்குலைக்கவும் எதிர்நிலையில் போராடி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனாலும் இந்த முயற்சி தோற்பது உறுதி. எதிர்வரும் 21ஆம் நூற்றாண்டில் ‘ஓருலகம்’ அமையும் - விளங்கும்!

உலக நாடுகளுக்கிடையே தொடர்பு கொள்வதற்கு, பண்டைக் காலத்தில் இருந்த சாதனங்கள் மிகச் சிலவே. பறவைகள், விலங்குகள்கூட ஒரு காலத்தில் தொடர்புச் சாதனங்களாக விளங்கின. வெகுகாலத்திற்குப் பின் கப்பல்கள், பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், தொலைபேசிக் கருவிகள் முதலியன தொடர்புச் சாதனங்களாக வளர்ந்து பெருகி வந்தன. இன்று உலகத்தின் பல <span title="நாடு


களையும்">நாடு


  1. சிந்தனைச் சோலை