பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

135


<span title="நாடு


களையும்">களையும் இணைத்து ஒன்றாக்குவதில் தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, விமானம் முதலியன அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன.

பழங்காலந்தொட்டே மாந்தர்குலத் தொடர்புகளைக் குறிக்கோளாகக் கொண்டு உலகந்தழீஇய பயணங்கள் மேற்கொள்ளப் பெற்று வந்தன. யுவான்சுவாங், வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்களுடைய பயணங்களும் பன்னாட்டுத் தொடர்புக்கு உரமூட்டின. நம் நாட்டில் காசி-இராமேஸ்வரம் யாத்திரை என்பது சமய வழிப்பட்டது மட்டுமன்று, நாட்டுமக்கள் தொடர்பு பெறுவதற்காகவும் அமைந்தது.

இன்று உலகம் முழுதும் வளர்ந்து வரும் ஒரு பண்பு-பழக்கம் சுற்றுலாப் போதலாகும். சுற்றுலாச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன்மூலம் மக்களிடையே பன்னாட்டுத் தொடர்பு வளர்ந்து வருகிறது. இங்ஙனம் வளர்ந்துவரும் பன்னாட்டுத் தொடர்பால் மனிதகுலம் பல்வேறு பயன்களையும் அடைந்து வருகிறது. முதலாவதாக மனிதர்களுக்கு விரிந்த மனப்பான்மை உருவாகிறது. மனிதரின் வாழ்நிலை, உயர்ந்த நாகரிகத் தரத்திற்கு உயர்த்தப்படுகிறது.

பன்னாட்டுத் தொடர்பினால், பல மொழிகள் கற்கும் ஆர்வம், தூண்டி வளர்க்கப்படுகிறது. மொழி, மனித குலத்திற்கிடையே தொடர்பையும், உறவையும் ஏற்படுத்தி வளர்க்கும் ஒரு கருவியேயாகும். மொழி, உறவுச் சாதனமே ஒரு பொழுதும் மொழி, பிரிவினைச் சாதனமாக இருந்ததில்லை; இருக்கவும் முடியாது. ஆனால் உடைமை, அதிகாரம் ஆகியவற்றில் வெறி பிடித்தவர்கள் மொழிகளையும் பகைவளர்க்கும் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். இது முறையுமன்று; நெறியுமன்று. பன்னாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து