பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

137


சிறப்புடையன, இவற்றுள் பூம்புகார் நகரம் மிகச்சிறந்து விளங்கியது.

பூம்புகாருக்கும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த வாணிகத் தொடர்புகளை கி.பி முதல் நூற்றாண்டின் தலைசிறந்த யாத்திரை நூலான பெரிபுரூஸ் விளக்கமாகத் தெரிவிக்கிறது.

இந்தப் பிரதேசத்தின் வாணிகச் சந்தை கூடும் நகரங்களில் டிமிரிகாவிலிருந்தும்[1] வடக்கிலிருந்தும் உள்ள துறை முகங்களிலிருந்து[2] வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களில் முதன்மைத்தானம் வகிப்பது காமாரா[3] என்ப தாகும். அதற்கடுத்தது பொதுகா[4] என்பது, அதற்கடுத்தது சோபடனா[5] இவற்றில் அந்நாட்டுக் கப்பல்கள் கடலோரமாக டிமிரிகா வரையிலும் சென்று தங்குகின்றன.

ஒரே மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு கட்டையுடன், மற்றொரு மரத்தில் செதுக்கப்பட்ட வேறொரு கட்டையைப் பிணைத்து விடப்பட்டதே பெரிய கப்பல் என்று வழங்கப்படும்.

இதன் பெயர் சங்காரா[6] என்பதாகும். ஆனால் கிரிஸே,[7] கங்கே,[8] முதலிய நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் கொலாண்டியா[9] என்று வழங்கப்படுகின்றன. அவை பார்வைக்குப் பெரிய உருவம் படைத்தனவாகவும் காட்சி-


  1. 1. தமிழகம்
  2. 2. காவிரிப்பூம்பட்டினம்
  3. 3. தொண்டி, முசிறி துறைமுகங்கள்
  4. 4. மாமல்லபுரம்
  5. 5. சென்னைப்பட்டின
  6. 6. இரண்டு கட்டு மரங்கள்
  7. 7. சுமத்ரா
  8. 8. கங்கையின் கழிமுகம்
  9. 9. கலம் (மரக்கலம்) எனும் தமிழ்ச் சொல் அடியாகப் பிறந்தது.