பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

14325. [1]இந்திய ஒருமைப்
பாட்டைக் காப்போம்!

ன்றைய இளைஞர்களே நாளைய இந்தியாவின் தலைவர்கள். தலைமைப் பொறுப்பேற்பது என்பது எளிதான ஒரு செயலன்று. அஃது ஒரு கடினமான பணி. தலைமைப் பொறுப்பேற்பதற்குரிய சிந்தனைத் திறன் அறிவு, அறிவறிந்த ஆள்வினை, ஒப்புரவு நெறி மேற்கொண்டொழுகல் ஆகிய திறன்களும் பண்பாடும் தேவை. இவை ஒருங்கு வந்து பொருந்தி விடுவதில்லை. பலகாலும் பழகுவதன் மூலமே வந்தமையும், அத்தகைய பழக்கத்திற்குரிய முயற்சிகளில் ஒன்று இந்த முகாம். இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்த காந்தி கிராமம் பல்கலைக் கழகத்திற்கு ஆயிரமாயிரம் பாராட்டுதல்கள்.

இங்கு வந்துள்ள இந்திய இளைஞர்கள், ஆற்றல் துடிப்புமிக்குடைய இளைஞர்கள். இந்த இளைஞர்களது இந்த முகாமை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு புதிய வரலாறு படைப்பார்கள் என்று நம்புகின்றோம்.

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் தேசிய ஒருமைப்பாட்டு
இளைஞர் முகாமில் 9.6.88-ல் ஆற்றிய உரை.

இந்தியா பழம் புகழ் வாய்ந்த ஒரு நாடு. இந்தியா ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருந்த காலத்திலெல்லாம் வளமாக இருந்திருக்கிறது; வரலாற்றுப் புகழ் பெற்றிருக்கிறது. எப்பொழுதெல்லாம் இந்தியாவில் ஒருமைப்பாடு குறைந்ததோ அப்பொழுதெல்லாம் நாடு அல்லற்பட்டிருக்கிறது என்ற வரலாற்று உண்மையை நாம் மறப்பதற்கில்லை. அசோகர் காலத்தில் இந்தியாவில் ஒருமைப்பாடு சிறந்து விளங்கியது. அசோகரின் அணுகுமுறை நமக்கு வழிகாட்டியாகும். அது குறித்து அண்ணல் நேரு, “நம்மிடம்


  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை!