பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

147


தடையாய் எது இருப்பினும் அது வெறுக்கத்தக்கது. இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கும் பண்பாட்டுக்குப் பல நற்பழக்கங்கள் தேவை. தன்னிச்சைப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். கூடிச் சிந்தனை செய்தல், முடிவெடுத்தல் அந்த முடிவுகளுக்குச் செயலுருவம் கொடுத்தல் தேவை. எந்த வகையிலும் தனி நபர் வழிபாட்டிற்கு இளைஞர்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது. “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற வாழ்வியல் கோட்பாட்டை இந்திய இளைஞர்கள் பின்பற்றவேண்டும் என்பது நமது விருப்பம்; வேண்டுகோள்.

இந்திய ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கு அரசுகளும் சில உதவிகள் செய்யவேண்டும். பன்மொழிப் பயிற்சி தரக்கூடிய பல நிறுவனங்கள் நாடு முழுவதும் தோன்ற அரசு ஊக்கமளிக்கவேண்டும். மொழி வளர்ச்சி அடிப்படையிலும், வேலைவாய்ப்பு அடிப்படையிலும் மாறுபட்ட உணர்வுகள் தோன்றாதிருக்க இந்திய தேசியமொழிகள் அனைத்தையும் நடுவண் அரசு திட்டமிட்டுப் பயிற்று மொழிகளாகக் கொண்டுவந்து வளர்க்கவேண்டும். இந்தியா தழுவிய சுற்றுப் பயணங்களை மக்கள்-குறிப்பாக இளைஞர்கள் மேற் கொள்ளப் பயண வசதிகள் செய்து தரவேண்டும்.

கார்லைல் என்ற அறிஞன் “பல்வேறு வகைப்பட்ட நெறிமுறைகளைச் சார்ந்த மக்களை இணைத்து ஒன்றுபடுத்த சக்திவாய்ந்த ஓர் இலக்கியம் வேண்டும்” என்கிறான், அதாவது நாட்டு இலக்கியம் வேண்டும் என்பது கருத்து. இந்திய நாட்டை இணைப்பதற்கும் ஒரு நாட்டு இலக்கியத்தை அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் இந்த நாட்டு நூலைக் கற்கவேண்டும். பயில வேண்டும். அந்நூல் நெறியில் நின்று ஒழுகுதல் வேண்டும். இப்படி ஒருநாட்டு நூலை இந்தியா தேர்வு செய்ய முன்வருமானால் அதற்கு ஏற்ற ஒரு நூல் திருக்குறள் என்பது தெளிவு; முடிவு. திருக்குறள் சமயம், மொழி, இனம்,