பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

151


என்கிற நச்சுக் காய்ச்சல் மனித உலகத்தைத் தீண்டாமல் பாதுகாக்க உதவும்.

இறைவன் திருவருளைச் சிந்தித்து வழிபடுக! திருவருள் பேரவையின் - அடியார் கூட்டத்துடன் இணைந்திடுக! திருவருள் பேரவைப் பணிகளுக்கு ஒத்துழைப்புத்தந்து உதவுக! இது நமது வேண்டுகோள்.

எங்கெங்கும் திருவருள் பேரவை அமைப்போம்!
ஆண்டவனைத் தொழுவோம்!
அனைத்துயிர் ஒருமைப்பாடு காண்போம்!


27. காலத்தின் கட்டளை

ந்தியா ஒரு நாடு. இன்றல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியா ஒரு நாடாக விளங்கி வந்துள்ளமையை இந்திய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்தியா பல மொழிகள் பேசும் நாடு; பல மதங்கள் உள்ள நாடு, பல சாதிகள் உள்ள நாடு என்பது உண்மையே. ஆயினும் மொழி, மதம் சாதி காரணமாக மக்கள் அந்நியராகிக் கொண்டு சண்டை போட்டதில்லை; நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் சிறந்து விளங்கினார்கள். எந்தச் சூழ்நிலையிலும் பொருத்தாளும் பண்பு ஓர் ஒழுக்கமாகவே ஏற்று ஒழுகப் பெற்றது.

அண்மைக் காலமாக இந்தியாவில் சாதி மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் அவற்றை மையப்படுத்திச் சிறு சிறு எல்லைகளை உண்டாக்கிக் கொண்டு இறுக்கமான உணர்வைப் பெற்றுவரும் தீமை பரவலாக வளர்கிறது. இந்தத் தீய மனப்போக்கை, அரசுகளின் அணுகுமுறைகள் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில், இந்திய மக்களிடத்தில் பரஸ்பர நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பது நமது கடமை. நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் உத்தரவாதத் தன்மை