பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

159


வணிகன் பாண்டிய அரசின் பெருமைகளை விளக்கிப் பாண்டியன் பாதுகாப்பான் என்று கூறுகிறான்; தன்னுடைய மனைவிக்கு நம்பிக்கை அளித்துவிட்டுச் செல்கிறான். பழங்காலத் தமிழ் நாட்டரசர்கள் நள்ளிரவில் தனியாக நகர்வலம் வந்து மக்களின் வாழ்நிலைகளைச் சோதனை செய்து அறிந்து கொள்வர். இங்ஙனம் பாண்டிய அரசன் நகர் வலம் வருகிறான். வணிகம் கருதி வெளியூர் சென்றிருந்த கணவன் திரும்பி வந்துவிட்டான். இரவில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தான். வணிகன் வீட்டில் பேச்சுக் குரல் கேட்கிறது. குரல் கேட்டவுடன் பாண்டியன் கதவைத் தட்டுகிறான். கணவனாகிய வணிகன் ஐயப்படுகிறான். மறுநாள் பாண்டியனின் அரசவை கூடுகிறது. தனது வீடு இரவில் தட்டப்பெற்றது குறித்து ஐயப்படுகிறான் வணிகன். அரசனிடம் முறையீடு செய்ய அரசவை வருகின்றான்; முறையீடு செய்கின்றான். முதல்நாள் இரவு நடந்ததைக் கூறுகிறான். வணிகன் வீட்டுக் கதவைத் தட்டிய தனது கையைப் பாண்டிய அரசன் உடனே வெட்டிக் கொள்கிறான். வெட்டப்பட்ட கைக்கு மாறாகப் பின் பொன்னாலாகிய கை பொருத்தப்பெற்றது. அதனால் பொற்கைப் பாண்டியன் என இவன் அழைக்கப்பெற்றான். இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வினை நோக்கும்போது

“உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒரு நாள்
அரைச வேலி யல்லதி யாவதும்
புரைதீர் வேலியில் ஏன மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றிர் அவ்வழி
இன்று அவ் வேலி காவா தோ, எனச்
செவிச் சூட் டரணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்