பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உச்சிப் பொன்முடி ஒளிவளை புடைத்தகை
குறைத்த செங்கோல் ............

(சிலம்பு கட்டுரைகாதை 42-50)

இந்தப் பாடல் பகுதி கூறும் பொற்கைப் பாண்டியனின் அரசு நினைவுக்கு வருகிறது.

சோழநாட்டைச் சேர்ந்த கோவலன் - கண்ணகி இருவரும் பிழைப்புக் கருதி, பாண்டிய நாட்டின் மதுரைக்கு வந்தனர். வாணிகம் செய்து பிழைப்பு நடத்தக் கையிலிருந்த சிலம்பில் ஒன்றை விற்பதற்கென, கோவலன் மதுரை நகர் அங்காடிக்கு வந்த இடத்தில் வஞ்சிப்பத்தனின் சூழ்ச்சியால் கோவலன், யாதொரு விசாரணையுமின்றிக் கொல்லப்படுகிறான். இது ஊழால் விளைந்த செயல். பாண்டியன் தனது அரசு பிழை செய்துவிட்டதை உணர்ந்த நிலையில் சமாதானம் பேசவில்லை. இழப்புத் தொகை தரவில்லை! உடன் அவன் உயிர் பிரிகிறது! ஓர் அரசன் தனக்குத்தானே “கெடுக என் ஆயுள்” என்று தண்டனை விதித்துக் கொண்டான். இன்று எத்தனை எத்தனை துப்பாக்கிச் சூடுகள்! உயிரிழப்புகள்! இவற்றையெல்லாம் காணும்பொழுதும் கேட்கும்பொழுதும் பாண்டியன் நெடுஞ்செழியனின் அரசு நினைவுக்கு வருகிறது.

சேரமான் பெருமாள் என்று ஓர் அரசர்! இவருக்குக் கழறிற்றறிவார் என்றும் பெயர் உண்டு. இந்த உலகில் வாழும் கோடானுகோடி உயிர் வர்க்கங்கள் கழறுவதன் செய்தியை அறிந்துகொள்ளும் பயிற்சி பெற்றிருந்தார். உயிர்க்குல நலம் நாடும் சேரமான் பெருமாள் எளிமையில் சிறந்து விளங்கினார். சேரமான் பெருமான் அரச வீதியில் தேரூர்ந்து வருகிறார். எதிரே ஓர் எளிய மனிதர் திருநீற்றுக் கோலத்துடன் வருகிறார். சேரமான் பெருமாள் தேரினின்றும் இறங்கி வணங்குகிறார். எதிரே வந்தவரோ முழுநீறு பூசிய முனிவர் அல்ல. சராசரி மனிதர் - வண்ணார்; அவர் அஞ்சி