பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

163


இங்கும் அங்குமாகச் செம்பொற் காசுகளைத் திரட்டி வந்து சங்கரலிங்க முனிவரிடம் பாதகாணிக்கையாக வைக்கின்றனர். சங்கரலிங்க முனிவர் அதனை வாங்க மறுக்கிறார். “எடுத்துக் கொண்டு போ! சுதந்திரப் போரைத் தீவிரமாக் நடத்து, பின் பார்த்துக் கொள்ளலாம் காணிக்கையை” என்று அருளி விட்டார். மருது சகோதரர்கள் வேறு வழியின்றி எடுத்துக் கொண்டு போய்விட்டனர். ஆனால் அந்தச் செம்பொன்களைக் கொண்டு விவசாயிகளிடம் குடியுரிமையை வாங்கி ஆதீன முதல்வர் பெயருக்கு அறக்கட்டளையாக ஓலை எழுதினர். கிராமத்திற்கு செம்பொன்மாரி என்று பெயர் சூட்டினர். அன்றைய ஆதீன அருளாளரின் தேசபக்தி நினைவுகூரத் தக்கது. மருது சகோதரரின் தேசபக்தியும் குரு பக்தியும் நினைவிற்குரியன. இந்த வரலாற்றினை நினைவு கூர்ந்தால் நமது சமயத் தலைவர்களிடையே தேசபக்தி வளரும்; தெய்வபக்தியும் வளரும்!


30. [1]ஒழுங்கு வளர

யற்கை உலகியலில் ஏதோ ஓர் ஒழுங்கிருக்கிறது-அந்த ஒழுங்கு ஆண்டாண்டுக் காலமாக மாறவில்லை. அந்த ஒழுங்கை மையமாக வைத்தே மனித உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதாவது அந்த ஒழுங்கு தவறும் பொழுதுதான் விபத்துக்கள் தோன்றுகின்றன. விபத்துக்களின் விளைவாக அழுகை தோன்றுகிறது.

இயற்கையில் உள்ள ஒழுங்கைவிட மனித குலத்தின் ஒழுங்கு சற்று அதிகமாகவே இருத்தல் வேண்டும். காரணம் இயற்கை நியதியின் பாற்பட்டது. மனிதன் அதற்கும் மேலாக அறிவு, அன்பு ஆகிய ஒழுங்கின் நிலைக் களன்களாகிய


  1. பொங்கல் பரிசு