பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்போதுதான் நன்றியின் பயனை அனுபவிக்க முடியும். நன்றின் பயன் விளையும். “நன்றுடையானை-தீய திலானை” என்பது தமிழ் மறை. இன்றையக் குறைநாளை நிறையாக வேண்டும். இதுவே வாழ்க்கை முறை. குறையே ஒரு பெருங் குற்றமாக முடியாது. குறையே ஒரு குற்றமன்று. ஆனால் குறையைக் குறையென்றுணராமல் இருப்பதுதான் குற்றமாகும். இன்று பலரிடம் குறையைக் குறையென்றுணரும் அறிவு இருக்கிறதா என்பதே கேள்வி. அந்த அறிவும் ஆற்றலுடன் செயல்படுகிறதா என்று பார்ப்பது அவசியம். எப்படி உலகியலில் அரும்பு மலர்ந்து மலராகிறதோ, பிஞ்சு காயாகிக் கனியாகிறதோ அதுபோல, மனிதனும் குறைகளைக் கடந்து பூரணத்துவம் பெற்று, முழு மனிதனாக வளர்ந்து, அதற்குரிய வாழ்க்கை முறைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். அந்த வாழ்க்கை முறைக்கு வீடும் நாடும் துணை செய்யவேண்டும்.

ஆசிரியர்கள் புனிதமான தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆசிரியத் தொழில் யாழை மீட்டுதலைவிட நுணுக்கமான தொழில். யாழை மீட்டுகிற வழி மீட்டாது போனால் இனிய இசை தோன்றாது. யாழும் கெடும். கேட்பவர்களும் அருவறுப்பர். புறப்பொருளாகி, நம்முடைய பூரண இயக்குதலுக்குக் கட்டுப்பட்ட யாழின் நிலையே இதுவானால், புலப்படாப் பொருளாகவும் நம்முடைய பூரண ஆற்றலுக்குக் கட்டுப்படாததாகவும் உணர்ச்சிகளின் சின்னமாகவும் இருக்கின்ற உயிர்களைத் திருத்தும் வேலை எவ்வளவு சிக்கலானது! சிக்கலானது மட்டுமல்ல-உலகில் எத்தொழிலுக்கும் தேவைப் படுகின்ற ஆற்றலைவிட இதற்கு ஆற்றல் அதிகமாகத் தேவை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒழுங்கின் பெரும்பகுதி பிறர் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்வதேயாகும். ஆசிரியர்கள் தம்முடைய வாழ்க்கை முறையினாலேயே மாணவர்களுக்கு ஒரு பேராசிரியராகத் திகழ வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏற்படும்