பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

185


ஆற்றல் நிறைந்ததுமாகிய திருக்கோயில்கள் எழுப்புவதையே தமிழக அரசர்கள் தம் கடமையாகக் கருதினர். நோன்பாகக் கொண்டனர். அதனால், திருக்கோயில்கள் யாண்டும் எழுந்தன. நின்று நிலவுகின்றன.

எனினும் காலத்தின் கோலம் எவரை விட்டது? காலம் என்ற பெருவெள்ளத்திற்குக் கண்ணும் இல்லை. கருத்தும் இல்லை. தமிழகப் பேரரசுகள் மலைபடு கதிரென மறைந்தன. திருக்கோயில்கள், பேணுவோரை எதிர்பார்த்து ஏங்கின. நகரத்தார் சமூகம் வரலாற்றுக்கும் தமிழகத் திருக்கோயில் பாதுகாப்புக்கும் புதியதோர் திருப்புமுனையை அத்தியா யத்தை உண்டாக்கிற்று. நகரத்தார் சமூகம் பழந்தமிழர் நெறி பற்றி வாழ்வதில் சிறந்த சமூகம். பழங்காலச் சோழப் பேரரசு கலமோட்டி, அலைகடலுக்கு அப்பாலும் சென்றது. நகர்த்தார்களும் திரைகடலோடித் திரவியம் திரட்டி வந்தனர். பழைய அரசர்களைப் போன்றே செந்தமிழையும் சிவநெறியையும் போற்றி வளர்த்து வருகின்றனர். கோயில் வழியதாக குடிகளை அமைத்துக் கொண்ட ஒப்பற்ற நாகரிகம் நிலவுவது நகரத்தார் சமூகத்தில்தான். வேறெந்த சமூகத்திலும் இந்த அமைப்பில்லை. தோன்றிய இடத்திலும் உறுதியோடு வளர இல்லை. அதனால், அவர்கள் திருக்கோயில்களுக்கு வழங்குவதில் கணக்குப் பார்ப்பதில்லை. வழங்குவதோடு மட்டுமின்றி, முறையாக வழிபாடுகள் செய்வதிலும் ஈடுபட்டார்கள். தாய் குழந்தைக்கு அணிசெய்து அழகூட்டிப் பார்த்தல் இயற்கை. அது தாய்மை அன்பைப் பெருக்குகிறது. குமரகுருபரரின் கவிதையுலகத்தில் குழந்தையான அங்கயற் கண்ணி அம்மையும் வேலெறிந்தசமர்த்தனும் குழந்தை களாக்கப் பெற்றனர். நகர்த்தார் சமூகத்தினரின் பக்தி யுலகத்தில் அவர்கள் குழந்தைகளாக இடம் பெறுவது மறக்க முடியாத ஒன்று. திருப்படிவங்களை அணிசெய்தலிலும், அழகு செய்வதிலும் அவ்வழி மகிழ்தலிலும் நடைமுறை வாழ்க்கையில் பக்திநெறி மிக்கோங்கி நிற்கிறது. இங்ஙனம்