பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பக்தி நெறியில் வளர்ந்த நகரத்தார் சமூகத்தினர் தமிழகத்தின் திருக்கோயில்களைப் புதுப்பித்தார்கள். புதிய கோயில்களை எழுப்பினார்கள். வட்மொழியிலும் தென் தமிழிலும் மறைகளை ஓதும் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்கள். பசிப் பிணி நீக்கும் மருத்துவமனைகளாக எண்ணற்ற சத்திரங்களைச் சமைத்தார்கள். இன்னமுது படைத்தார்கள். செட்டி நாட்டின் நடுநாயகமாக விளங்குவது குன்றக்குடி அக்குன்றில் பிறவிப் பிணிநீக்கும் மருந்தெனப் படர்ந்து திருக்கோயில் கொண்டு வாழ்வித்தருளும் ஆறுமுக அண்ணல் நகரத்தார் சமூகத்தின் கண்கண்டதெய்வம் - குலதெய்வம். அத்தெய்வத்தைப் போற்றிப் பரவுவதில் சென்ற காலத்தில் செய்த பணிகள் ஏராளம் ஏராளம்! இனிச் செய்ய இருப்பவையும் ஏராளம்! நகரத்தார் சமூகம் தமிழகத்தின் வரலாற்றுக்குத் தொடர்ச்சியூட்டிய சமூகம். தமிழ்க்கலைக்கும் நாகரிகத்திற்கும் உயிரூட்டிய சமூகம். ஒவ்வொரு சைவத் தமிழ் மகனும் நன்றிக் கடப்பாடோடு பாராட்டவேண்டிய சமூகம். நாமும், இந்தப் பொது விதிக்கு விதிவிலக்கல்லவே? நகரத்தார் சமூகம் நீடுயர் செல்வமும் ஓங்கி, உயர் புகழும் பெற்று நெடிது வாழ-வளர திருவருள் பாலிக்கும் வண்ணம் அண்ணாமலை அண்ணலின் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.


35. [1]நாம் காணும் பெரியார்

ன்று தமிழகத்தின் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பிறந்த நாள். மனித சமுதாயத்தின் வரலாறு, காலங்கடந்த மூப்புடையது. காலத்திற்குக் காலம் பல்வேறு கருத்துக்களோடு இயைந்து சமுதாயம் வளர்ந்து வருகிறது. எப்பொழுதுமே மனிதனுக்கு மாற்றம் காண்பதில் விருப்பம் அதிகம். நெல் விளையும்


  1. பொங்கல் பரிசு