பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறுகின்றார். மானமுடைமையைத் திருவள்ளுவர் பெரிதும் பாராட்டுகின்றார். ஆனால், மானம், மரியாதை எல்லாம் அந்நிய இனத்தில் பார்க்கவேண்டுமே தவிர, நம்முடைய சொந்த இனத்திற்குள் பார்க்கக்கூடாது என்பது வள்ளுவர் கருத்து,

‘குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்’

–குறள் 1028

என்கிறார் திருவள்ளுவர்.

தமிழினம் காலத்தால் மூத்த இனம். கருத்தாலும் மூத்த இனம். எனினும், கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழினத்தில் இன ஒருமைப்பாடு கெட்டுவிட்டது. ஏன்? இல்லாமலேகூடப் போய்விட்டது. தமிழினத்தின் ஒருமைப்பாட்டுச் சிதைவில்தான் திராவிட இனம் என்ற புதிய இனம் தோன்றிற்று என்று கொள்ளுவதில் பிழையில்லையென்றே கருதுகின்றோம். தமிழினத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பிற இன ஊடுருவல்கள் உலை வைத்தன. சிந்தனை, இலக்கியம், சமயம் ஆகிய பல்வேறு துறைகளிலும் பிறமொழி, பிற இன ஊடுருவல்கள் எழுந்து தலை தூக்கி ஆதிக்கம் செய்யத் தொடங்கின. இதன் காரணமாகத் தமிழினத்திற்குத் தேவையில்லாத சாதீயமுறை வைப்புக்கள் தமிழினத்தில் தோற்றுவிக்கப்பெற்றன. சாதி முறைகளின் தோற்றத்தால் உடலும் உயிரும் போல ஒன்றி வாழ்ந்த தமிழினம் ஓராயிரம் சாதிகளாகப் - பிரிந்தன. பரிவோடு பகையும் உடன் தோன்றிற்று, இனக்கட்டுக் கோப்புக் குலைந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, வாழ வந்தோர் ஆதிக்க உரிமை பெற்றனர். மேல் சாதி, சமூகத் தகுதி, கல்வி உரிமை, உழைப்பில்லாமலே உரிய பொருள் பெறும் உரிமை ஆகியவைகள் குறிப்பிட்ட - ஊடுருவிக் கெடுத்த ஓரினத்திற்கே ஏகபோக உரிமையாயின. சிதறிய சில அவர்களுடைய கங்காணிகளுக்கும் கிடைத்தன. தமிழன் கீழ் சாதியானான்