பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உறுதி-ஆகிய குணநலன்கள் எல்லாம் பெரியாரவர்களிடத்தில் நிரம்பப்பெற்றுள்ள உண்மை, நாடு அறிந்த ஒன்று.

பொது வாழ்வு என்பது உலகியல் ரீதியில் மலர் தூவிய பாதை என்று சொல்ல முடியாது: பொது வாழ்வு என்பது மிகவும் கடினமான ஒருதுறை. நாம் இங்கு குறிப்பிடுகின்ற பொதுவாழ்வென்பது, இந்த நூற்றாண்டில் பலர் மேலெழுந்த வாரியாக, ஏனோ தானோ என்று செயற்படுகின்ற பொது வாழ்வைக் குறிப்பிடவில்லை. கொள்கைப்பிடிப்போடு, ஆழமான பொதுவாழ்வு மேற்கொண்டிருப்பவர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றோம். (பொதுவாழ்வுக்கு இன்றியமையாக் குணங்கள்: உள்ளதை உள்ளவாறு சொல்லுதல்; வசவையும், வாழ்த்தையும் சமம் எனக் கருதுதல், எந்தவிதமான இடர்ப்பாடுகளுக்கும் தான் ஆளாவது குறித்து வருத்தப்படாமல் இருத்தல்; இன்பம் விழையாமலும், துன்பம் கண்டபொழுது தளராமலும் அயராது உழைத்தல் ஆகியவைகளாகும்.

இத்தகு சிறந்த குணங்கள் அமையப்பெற்று, பொது வாழ்வில் ஈடுபட்டோருக்கு யாதும் பலன் இல்லை. அவர்கள் வரலாறு கண்ணீரைத் தருகின்ற நிகழ்ச்சிகளாகவே இருக்கும். ஆனால் நாட்டுமக்கள் எழுச்சியும், ஏற்றமும் பெறுவர். இக்கருத்துண்மையினை உலக வரலாறு முழுவதிலுமே, நாம் காண்கின்றோம். புதுமை காணப் புத்துணர்வு கொண்டவர்களை, சமுதாய இழிவை நீக்கி, ஏற்றம் தர முயன்றவர்களைப் புதைகுழிக்கே நாடு அனுப்பி வைத்துள்ளது. ஆனாலும், அந்தப் புதைகுழிகள் புதுமைப் பூங்காக்களாக மாறின என்பன, வித்தை வரலாற்றின் ஊடே ஊடுருவிக் கிடக்கின்ற உண்மைகளாகும்.

தன்னலச் சமூகம்

லைவர் பெரியார் அவர்களுடைய பொது வாழ்வு தொல்லைகள் நிறைந்த ஒன்று என்பதை யாரும் மறுக்கவோ,