பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

201


கின்றன. இத்தகைய சாதீயக் கொள்கைகளைத் தகர்த்தெறியப் பெரியாரவர்கள் பேரார்வம் கொண்டுள்ளார்கள். அதற்கென்றே தம் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்துள்ளார். இந்த சாதி ஒழிப்புக் கொள்கையை, நல்ல மனம் படைத்த அத்துணை பேரும் ஒப்புக் கொள்ளுவார்கள். சில பல பிற்போக்குவாதிகள் வேண்டுமானால் மறுக்கக்கூடும். ஆனால் எதிர்காலத்தில் சாதீய உணர்ச்சிகள் சருகெனக் காய்ந்து கருகிக் கீழே விழப்போவது உண்மை.

நமக்குள் இந்த 1961-இலும் சாதிப்பாகுபாடுகள் இருப்பது, நமது சமுதாயத்திற்கே இழுக்காகும். சிலர் சாதி ஒழியுமானால், மதம் ஒழிந்துவிடுமே என்று கூட அச்சப்படுகின்றனர். மதத்தைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, சாதி ஒழியக்கூடாது என்று கூறவும் முற்படுகின்றனர்.

தஞ்சை மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டமும் தான், தமிழ்நாட்டிலேயே சாதி ஆணவங்கள் தலை விரித்தாடிய மாவட்டங்கள். இப்படிப்பட்ட சாதிக்கொடுமையின் காரணமாகத்தான், தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகமும், திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஸ்தவ சமயமும் மிகுதியாகப் பரவி இருக்கின்றன.

வருங்காலச் சந்ததிகளுக்குச் சாதியைப்பற்றிய எண்ணம் தோன்றாத அளவுக்குச் சாதி ஒழிந்த சமதர்ம சமுதாயத்தைத் தலைவர் பெரியார் அவர்களின் காலத்திலேயே நாம் அடையவேண்டும். நமக்குள்ளே, பல கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இன ஒருமைப்பாடு என்ற ஒரே இலட்சியத்தில் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இந்தித் தடுப்பாளர்

அடுத்து, ஓர் இனத்திற்கு மொழி முதுகெலும்பு போல், முதுகெலும்பு உள்ள மனிதனே நிமிர்ந்து நடக்க முடியும். அதுபோல மொழிநலம் படைத்த இனமே, பல்வேறு இனங்