பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களிடையே நிமிர்ந்து வாழ முடியும். பல்வேறு மொழிவழிப்பட்ட இனங்கள் வாழும் பாரதநாட்டில், அவ்வப்போது தேசீய மொழி என்ற பெயரில், தமிழகத்தின் தனி மொழியாக இருக்கின்ற தமிழுக்கு ஊறுகள் விளைவதை நடைமுறையில் கண்டு வருகிறோம். தமிழர்கள் "இந்தி"யைத் தேசீய மொழியாக, தேசிய ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட கட்டாயச் சூழல்கள் வந்த காலத்திலெல்லாம், இந்தியை எதிர்த்துப் போராடி, சிறைத் துன்பங்களை மேற்கொண்டு, ஹிந்தியின் நுழைவைச் சில காலத்திற்குத் தள்ளிவைத்த பெருமை பெரியார் அவர்களுக்கு உண்டு. அத் துறையில் தமிழகத்தின் தன்மானங்காத்த தலைவர் பெரியார் என்று சொன்னாலும் மிகையன்று. எனினும் ஹிந்தியின் நுழைவு தவிர்க்கப்பட இல்லை; தவிர்க்க முடியாத ஒன்று என்று நாம் கருதுகிறோம். தேசிய ஆட்சிமொழியாக ஆங்கிலம் இருக்கவேண்டும். அல்லது ஹிந்தியோடு ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். பாரதத்தின் தேசீய ஆட்சி மொழியாகப் பாரத நாட்டின் இனவழிப்பட்ட இனமொழிகளுக்குள் ஒன்றோ அல்லது சில மொழிகளோ இருக்க வேண்டுமேயொழிய, ஆங்கிலம் தேசீய ஆட்சிமொழியாக இருப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்தியாவின் தேசீய ஆட்சிமொழியாக இந்தி இருக்க வேண்டுமென்பதில், தமிழினத்துக்குக் கருத்து வேற்றுமை இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இந்தி மட்டும் பாரதத்தின் தேசிய ஆட்சிமொழியாக இருப்பதென்பதைத் தமிழினம் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமுடியாது. சில ஐரோப்பிய நாடுகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக இருப்பது போல, பாரதத்திலும் அரசினர் பாரத தேசிய இனமொழிகளாக ஏற்றுக் கொண்டுள்ள பல மொழிகள், ஆட்சி மொழிகளாக வர